»   »  வேதாளம்: அஜீத்தின் அட்டகாசமான ஆட்டத்துடன் வெளியானது 'ஆலுமா டோலுமா' டீசர்

வேதாளம்: அஜீத்தின் அட்டகாசமான ஆட்டத்துடன் வெளியானது 'ஆலுமா டோலுமா' டீசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜீத்தின் அட்டகாசமான ஆட்டத்துடன் நேற்று நள்ளிரவில் தரலோக்கல் பாடல் டீசர் வெளியானது. அனிருத் கூறியதைப்போல பாடல் உண்மையிலேயே தர லோக்கல் ரகம் தான்.

ஆலுமா டோலுமா என்று தொடங்கும் இந்தப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார், படத்தில் அஜீத்தின் ஓபனிங் பாடலாக வரும் இந்தப் பாடலில் தல ஒரு அதிரடியான ஆட்டம் போட்டிருக்கிறார்.

Vedhalam Song Teaser Released

ஜீன்ஸ் + குர்தா போட்டு கண்களில் கூலிங்கிளாஸ் அணிந்து அஜீத் ஆடும் இந்தப் பாடலின் டீசர் 22 நொடிகள் மட்டுமே இருந்தாலும் துள்ளலான இசை, அனிருத்தின் துடிப்பான குரல் மற்றும் அஜீத்தின் ஆட்டம் ஆகியவை காரணமாக இந்த டீசரை ரசிகர்கள் திரும்பத்திரும்ப பார்த்து வருகின்றனர்.

பாடல் டீசர் வெளியாகி 9 மணி நேரங்களில் இதுவரை 2,50,696 பேர் டீசரை பார்த்து ரசித்திருக்கின்றனர். மேலும் 30,166 பேர் டீசரை லைக் செய்திருக்கின்றனர்.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p lang="ta" dir="ltr">தியேட்டரில் தல தீபாவளிதான்... <a href="https://twitter.com/hashtag/VedalamPromoVideoAt12am?src=hash">#VedalamPromoVideoAt12am</a> <a href="http://t.co/LCgbWgCK7I">pic.twitter.com/LCgbWgCK7I</a></p>— அமர்க்களம் (@Playboy_vasu) <a href="https://twitter.com/Playboy_vasu/status/654375371538694144">October 14, 2015</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

பாடல் டீசர் தாங்கள் எதிர்பார்த்ததைவிட நன்றாக இருப்பதால் தியேட்டரில் இந்த வருடம் தல தீபாவளிதான் என்று, அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

தரலோக்கல் பாடல் டீசர்..

English summary
Ajith's Vedhalam Promo Song Teaser Released. Director Siva Says "#AalumaDoluma thank u thala fans and cinemalovers....super super happy with ur love ...sai sai".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil