»   »  சாதனை படைக்கும் வேதாளம் டீசர்.. இணையத்தில் 40 லட்சம் பார்வைகளைக் கடந்தது

சாதனை படைக்கும் வேதாளம் டீசர்.. இணையத்தில் 40 லட்சம் பார்வைகளைக் கடந்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் வேதாளம் டீசர் தற்போது புதிதாக ஒரு சாதனையை புரிந்து இருக்கிறது.

கடந்த 8ம் தேதி வெளியான இந்தப் படத்தின் டீசரை இணையத்தில் இதுவரை சுமார் 4,107,592 பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். ஒருபக்கம் படத்தின் புரோமோ சாங் டீசர் வெளியானாலும் மறுபக்கம் சாங் டீசரையும் விடாமல் பார்த்து ரசித்து வருகின்றனர் அஜீத் ரசிகர்கள்.

மேலும் படத்தின் டீசரை இதுவரை சுமார் 1,26,494 பேர் லைக் செய்திருக்கின்றனர். இத்தனை பேர் லைக் செய்திருந்தாலும் மறுபக்கம் 42,426 டீசரை டிஸ்லைக் செய்திருக்கின்றனர்.

பார்வைகள் அதிகமானாலும் கூட டிஸ்லைக் அதிகமாவது படக்குழுவினரை வருத்தப்பட வைத்திருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.இந்நிலையில் நேற்று வெளியான சாங் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெளியான 16 மணி நேரங்களுக்குள் சுமார் 4,49,153 பேர் இந்த சாங் டீசரை இணையத்தில் பார்த்து ரசித்திருக்கின்றனர் 36,299 பேர் டீசரை லைக் செய்திருக்கின்றனர்.

நாளை இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று நள்ளிரவில் பாடல்களை படக்குழுவினர் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Ajith’s Vedhalam Teaser was released on the midnight of October 7. The teaser, which is storming the social networking websites, crossed More than 40 lakhs views within 8 days of its release.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil