»   »  9 மணிநேரத்தில் 5 லட்சம் பார்வைகளைத் தாண்டியது வேதாளம் டீசர்

9 மணிநேரத்தில் 5 லட்சம் பார்வைகளைத் தாண்டியது வேதாளம் டீசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வேதாளம் படத்தின் டீசர் நேற்று நள்ளிரவில் வெளியாகியது. ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட டீசர் அட்டகாசமாக இருக்கிறது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் டீசர் பல சாதனைகளை படைக்க வேண்டி பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில கோரிக்கைகளையும் அஜீத் ரசிகர்களுக்கு விடுத்திருக்கின்றனர்.

[வேதாளம் டீஸர்]

இந்நிலையில் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சி அடையும் விதமாக வெளியான 9 மணி நேரத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டியிருக்கிறது டீசர்.

வேதாளம்

வேதாளம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, அஸ்வின் ஆகியோர் நடித்து வரும் படம் வேதாளம். கடந்த மாதம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் படக்குழுவினர் டீசரை வெளியிட்டு உள்ளனர்.

கண்ணாமூச்சி ரே ரே

கண்ணாமூச்சி ரே ரே

படம் இப்படி இருக்கும் என்று நாம் எதிர்பார்த்ததை போல அல்லாமல் வேறு விதமாக வந்திருக்கிறது என்பது டீசரில் கண்கூடாக தெரிகிறது. அஜீத் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் என்று கூறினார்கள், ஆனால் டீசரில் அஜீத் பைக் ரேஸராக வருவது போன்று காட்சிகள் உள்ளன. மேலும் வில்லனிடம் கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு என்று பாட்டுப்பாடி விளையாட்டு காட்டுகிறார்.

தெறிக்க விடலாமா

தெறிக்க விடலாமா

டீசர் வெளியானதும் டீசரைத் தெறிக்க வைக்க வேண்டும் என்று காத்திருந்த ரசிகர்கள் அஜித்தே டீசரில் தெறிக்க விடலாமா என்று கேட்டதும் உற்சாகம் கொண்டு மேலும் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது ட்விட்டரில் #vedalamteaserblast என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி டீசரை இந்தியளவில் ட்ரெண்டடிக்க வைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

5 லட்சம் பார்வைகள்

5 லட்சம் பார்வைகள்

வெளியான 9 மணி நேரத்திற்குள் சுமார் 5,22,087 பேர் டீசரை இணையத்தில் பார்த்து ரசித்திருக்கின்றனர். மேலும் 77, 953 பேர் டீசரை லைக் செய்திருக்கின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் புலி படத்தின் லைக் வரலாற்றை முறியடிக்க வேதாளத்திற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

தல தீபாவளி

வேதாளம் தீபாவளிக்கு வெளியாவதால் அஜீத் ரசிகர்கள் இந்த தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாட இருக்கின்றனாராம்.

English summary
Ajith's Vedhalam Teaser was Released at Midnight, the Teaser Crossed More than 5 Lakh views in just 9 Hours.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil