»   »  தெறிக்க விடலாமா?: வேதாளம் டீஸரில் அதிர வைக்கும் அஜீத்

தெறிக்க விடலாமா?: வேதாளம் டீஸரில் அதிர வைக்கும் அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்தின் டீஸர் நள்ளிரவில் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதி ஹாஸன், லக்ஷ்மி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேதாளம். படத்தின் பெயரை அறிவிக்கவே சிவா பலகாலம் எடுத்துக் கொண்டார். எப்ப தான் சார் தலைப்பை அறிவிப்பீர்கள் என்று அஜீத் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்த பிறகே தலைப்பு அறிவிக்கப்பட்டது.

Vedhalam teaser released in midnight

இந்நிலையில் படத்தின் டீஸரை நள்ளிரவில் வெளியிட்டுள்ளனர். டீஸரில் அஜீத் கொடூரமான குரலில் கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு என்று கூறுகிறார். தல இந்த படத்திலும் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தான் வருகிறார்.

[வேதாளம் டீஸர்]

ரெட் படத்தில் வருவது போன்ற கெட்டப்பில் அஜீத் வேதாளம் படத்தில் வருகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் டீஸரில் அவரின் கெட்டப்பை பார்த்தால் வீரம் கெட்டப் போன்று உள்ளது. டீஸரின் முடிவில் அஜீத் கருப்பு நிற பனியன் அணிந்தபடி தெறிக்க விடலாமா என்று கேட்கிறார்.

டீஸர் வெளியானதில் இருந்து அதை அவரின் ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.

English summary
Ajith starrer Vedhalam's teaser has been released in midnight. Thala is sporting his usual salt and pepper look in the teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil