»   »  வேதாளம்… கொண்டாடும் அஜீத் ரசிகர்கள்..: விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கிண்டல்

வேதாளம்… கொண்டாடும் அஜீத் ரசிகர்கள்..: விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்கள் நண்பர்களாக்கும் என்று அஜீத்தும் விஜய்யும் அவ்வப்போது அறிவித்தாலும் இருவரின் ரசிகர்களுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் நடைபெறும் மோதலை தடுக்க இந்த இரு நடிகர்களும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

புலி படம் ரிலீஸ் ஆனபோது அஜீத் ரசிகர்கள் சிலர் மோசமாகக் கிண்டல் அடிக்க கொதித்துப்போன விஜய் ரசிகர்கள், காவல் துறையில் புகார் அளித்தனர்.


இப்போது விஜய் ரசிகர்களின் நேரம் போல இருக்கிறது. வேதாளம் என்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து டீசர், விநாயகா பாடல் வெளியானது வரை டுவிட்டரில் ஓட்டி எடுத்தார்கள். இதற்கு பயந்தே டிரெயிலரை கூட வெளியிடாமல் தவிர்த்து விட்டனர். அதற்கு வேறு காரணங்களை கூறினாலும் உண்மையான காரணம் டுவிட்டர் கலாய்ப்புகளுக்கு பயந்துதான் வெளியிடவில்லையாம்.


ரசிகர்கள் ஏமாற்றம்

வரும் செவ்வாய்க்கிழமை படம் வெளியாகவிருப்பதால் இந்த வியாழக்கிழமை டிரெயிலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இதனால் அஜீத் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக போய்விட்டது.


ரெடியாகாத டிரெயிலர்

ரெடியாகாத டிரெயிலர்

வேதாளத்தை சென்சாருக்கு அனுப்புவது, முதல்பிரதியைத் தயார் செய்வது போன்ற வேலைகளில் தீவிரமாக இருந்ததால் டிரெயிலரை உருவாக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. வியாழக்கிழமையை விட்டால் படவெளியீட்டுக்கே நான்குநாட்கள்தாம் இருக்கின்றன என்பதால் டிரெயிலரை வெளியிடவில்லை என்று பட தயாரிப்பு குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


விஜய் ரசிகர்கள் கிண்டல்

டிரெயிலர் வெளியாகாத காரணத்தால் அஜீத் ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் இரங்கல் செலுத்துவதற்காக ஹேஸ்டேக் போட்டு கிண்டல் செய்யும் விதமாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


களைகட்டும் தியேட்டர்கள்

வேதாளம் டிரெயிலர் வெளியாகாவிட்டால் என்ன தீபாவளி திருநாளில் ரிலீஸ் ஆக உள்ள வேதாளம், படத்திற்கான டிக்கெட் புக்கிங் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. தியேட்டர்களில் பிளெக்ஸ் போர்டுகள் கண்ணை பறிக்கின்றனர்.


சிம்பு ரசிகர்கள் பேனர்

அஜீத் படத்திற்கு சிம்பு ரசிகர்களும் பல இடங்களில் பேனர்களை வைத்து அசத்தி வருகின்றனர். விஜய் ரசிகர்களுக்காக சூர்யா ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


என்ன செய்யப் போறாங்களோ

என்ன செய்யப் போறாங்களோ

இப்பவே இப்படி என்றால் தீபாவளி நாளில் படம் வெளியான பின்னர் வேதாளாத்தை முறுங்கை மரத்தில் ஏற்றிவிட்டுத்தான் மத்த வேலையை செய்வார்கள் விஜய் ரசிகர்கள் என்று கூறப்படுகிறது.


English summary
Diwali treat for the Ajith Fans, Last Thursday makers revealed the Vedhalam song teaser. Makers to reveal the trailer soon. Buzz is saying that this movie would release in between November 10th as a Diwali gift to fans of Ajith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil