»   »  தினமும் அடித்து உதைத்தார்: விவாகரத்தான கணவர் பற்றி நடிகை பரபர புகார்

தினமும் அடித்து உதைத்தார்: விவாகரத்தான கணவர் பற்றி நடிகை பரபர புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: தன்னை தனது முன்னாள் கணவர் ஆசாத் அடித்து துன்புறுத்தியதாக நடிகை வீணா மாலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த நடிகை வீணா மாலிக் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் கட்டக் என்பவரை திருமணம் செய்து துபாயில் செட்டில் ஆனார்.

2 குழந்தைகள் பிறந்த நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். லாகூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விவாகரத்து பெற்றார் வீணா.

டிவி நிகழ்ச்சி

டிவி நிகழ்ச்சி

பாகிஸ்தான் டிவி நிகழ்ச்சி ஒன்றில் வீணா மாலிக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஆசாதும் கலந்து கொண்டார். மேலும் அவர்களை சேர்த்து வைக்க மவுலானா ஒருவரையும் அழைத்திருந்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

மன்னிப்பு

மன்னிப்பு

நான் வீணாவிடம் தினமும் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஆசாத் கூறினார். இதை கேட்ட வீணா கூறுகையில், ஆசாத் செய்த இரண்டு விஷயங்களை என்னால் மன்னிக்கவே முடியாது என்றார்.

அடி, உதை

அடி, உதை

ஆசாத் என்னை அடித்துள்ளார். மேலும் என்னை மன ரீதியாக கொடுமைப்படுத்தியதுடன் அவமதித்துள்ளார். அதுவும் தொடர்ச்சியாக. இதனால் நான் அவரை மன்னிக்க மாட்டேன் என்றார் வீணா.

பாவம்

பாவம்

ஆசாத் தான் இத்தனை பேருக்கு முன்பு மன்னிப்பு கேட்கிறார் அல்லவா அவரை மன்னித்துவிடுங்கள் என்று மவுலானா வீணாவிடம் தெரிவித்தார். அதற்கு வீணாவோ, இனி என்னை ஒழுங்காக பார்த்துக் கொள்வேன் என ஆசாத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு கூறுங்கள் நான் மன்னிக்கிறேன் என்றார்.

ஆசாத்

ஆசாத்

வீணாவை அன்பாக பார்த்துக் கொள்வதாகவும், தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழுமாறும் எழுத்துப்பூர்வமாக அளிக்க ஆசாத் ஒப்புக் கொண்டார். அதன் பிறகு அவரை மன்னித்துவிட்டதாக கூறினார் வீணா.

English summary
Veena Malik has divorced her husband Asad Khattak and the actress opened up about how her husband used to beat her up and disrespected her all these days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil