»   »  பாபி சிம்ஹா வெளியேற, விஷ்ணு உள்ளே வந்தார்... வீரா அப்டேட்

பாபி சிம்ஹா வெளியேற, விஷ்ணு உள்ளே வந்தார்... வீரா அப்டேட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகவிருக்கும் வீரா படத்தில் நடிகர் பாபி சிம்ஹாவிற்குப் பதிலாக விஷ்ணு விஷால் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான பாபி சிம்ஹா, நடிகை ஐஸ்வர்யா மேனனுடன் இணைந்து வீரா படத்தில் நடிக்கிறார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின.


Veera Movie Hero Change

புதுமுக இயக்குநர் ராஜாராம் இயக்கும் இப்படத்தை எல்ரெட் குமார் தனது ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரிக்க முன் வந்தார்.


இந்நிலையில் இப்படத்திலிருந்து பாபி சிம்ஹா விலகிவிட்டார் என்று உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. வரிசையாக கைநிறைய படங்களை வைத்திருப்பதால் கால்ஷீட் பிரச்சினை எழுந்ததாகவும் அதனால் தான் இப்படத்திலிருந்து பாபி சிம்ஹா விலகி விட்டார் என்றும் கூறுகின்றனர்.


பாபி சிம்ஹாவிற்குப் பதிலாக நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா மேனன், கருணாகரன் நடிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.


வட சென்னையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.


21 வருடங்களுக்கு முன் ரஜினி, மீனா, ரோஜா நடிப்பில் வெளிவந்து ஹிட்டடித்த வீரா படத்தின் தலைப்பையே இந்தப் படத்திற்கும் படக்குழுவினர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
RS Infotainment Elred Kumar's Veera Movie Hero Now Changed, After Bobby Simha now Vishnu Vishal Got this Opportunity.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil