»   »  டிசம்பர் 16-ல் வெளியாகிறது வீர சிவாஜி!

டிசம்பர் 16-ல் வெளியாகிறது வீர சிவாஜி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் பிரபு நடித்துள்ள வீர சிவாஜி படம் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இதோ அதோ என வெளியாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும் படம் 'வீர சிவாஜி'.

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லி, ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.

Veera Sivaji on Dec 16

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. தணிக்கையில் 'யு' பெற்றிருக்கும் இப்படம் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவித்தார்கள்.

ஆனால், பல்வேறு பெரிய படங்கள் வெளியானது மற்றும் பணத் தட்டுப்பாடு காரணமாக 'வீர சிவாஜி' வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் வெளியீடு என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

சூர்யாவின் எஸ் 3 ஒரு வாரம் தள்ளிப் போனதால், தற்போது டிசம்பர் 16-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது.

English summary
Vikram Prabhu's Veera Sivaji will be released on Dec 16 worldwide.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil