முக்கியமான நாளில் ரிலீசாகும் விஷாலின் வீரமே வாகை சூடும்

சென்னை : அறிமுக இயக்குனரான து.ப.சரவணன் இயக்கி உள்ள படம் வீரமே வாகை சூடும். விஷால் ஹீரோவாகவும், டிம்பிள் ஹயாதி ஹீரோயினாகவும் நடித்துள்ள படம். யோகி பாபு, பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அகிலன், மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

விரைவில் டீசர், டிரைலர்

விரைவில் டீசர், டிரைலர்

விஷாலின் 31 வது படமாக தயாராகி வரும் இந்த படத்தின் டைட்டில், மோஷன் போஸ்டருடன் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டது. படத்தில் டீசர் மற்றும் டிரைலர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள்

போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள்

வீரமே வாகை சூடும் படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் மாதமே முடிவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்ற வருகின்றன. இந்த படத்திற்கான டப்பிங் வேலைகளை விஷால், அக்டோபர் மாதமே முடித்து விட்டார்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

தீபாவளிக்கு ரிலீசான எனிமி படத்தை தொடர்ந்து விஷால் நடித்துள்ள படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய நாளில் ரிலீஸ்

முக்கிய நாளில் ரிலீஸ்

2022 ம் ஆண்டு இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 ம் தேதியன்று வீரமே வாகை சூடும் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே எனிமி படம் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் தீபாவளியன்று ரிலீஸ் செய்யப்பட்டதால், வீரமே வாகை சூடும் படம் அஜித்தின் வலிமை படத்துடன் பொங்கல் ரேஸில் மோதும் என கூறப்பட்டு வந்தது.

தெளிவாக யோசித்த படக்குழு

தெளிவாக யோசித்த படக்குழு

ஆனால் நீண்ட காலத்திற்கு பிறகு தீபாவளிக்கு ரஜினி படம் ரிலீசானதால், அண்ணாத்த மாஸில் எனிமி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றே கூறப்படுகிறது. அதே நிலை மீண்டும் ஏற்பட வேண்டாம் என்பதால் வீரமே வாகை சூடும் படத்தில் பொங்கலுக்கு இல்லாமல் குடியரசு தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

இரு மொழிகளில் ரிலீஸ்

இரு மொழிகளில் ரிலீஸ்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் வீரமே வாகை சூடும் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் 2, லத்தி ஆகிய படங்களும் விறுவிறுப்பாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X