»   »  ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் படமாகிறது.. ராம்கோபால் வர்மா இயக்குகிறார்!

ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் படமாகிறது.. ராம்கோபால் வர்மா இயக்குகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய விவகாரம் விரைவில் படமாகிறது. இப்படத்தை பிரபல சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்குகிறார்.

அன்று சந்தனக் கடத்தல்காரராகப் பார்க்கப்பட்ட வீரப்பன் மீதான இமேஜ் இப்போது மாறி வருகிறது. வீரப்பன் தமிழ் மக்களின் காவலராகப் பார்க்கப்படுகிறார். பாமக, நாம் தமிழர் கட்சிகள் மற்றும் சில தமிழ் அமைப்புகள் வீரப்பனை பெரும் வீரன் மற்றும் தமிழ் பற்றாளராகக் கொண்டாடுகின்றனர்.

2000 ஆண்டில் தமிழக எல்லையில் உள்ள தனது பண்ணை வீட்டில் ராஜ்குமார் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது வீரப்பன் துப்பாக்கியுடன் வந்து அவரைக் கடத்திச் சென்றார். அவருடன் மேலும் மூவரையும் கடத்திச் சென்றார். நாட்டையே அதிர வைத்த கடத்தல் இது.

பெரும் முயற்சி

பெரும் முயற்சி

ராஜ்குமாரை மீட்க தமிழக, கர்நாடக அரசுகள் பெரும் முயற்சி எடுத்தன. தூதுவர்கள் அனுப்பப்பட்டார்கள். நடிகர் ரஜினிகாந்தும் பெரும் முயற்சி செய்தார்.

108 நாட்கள்

108 நாட்கள்

பல கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு ராஜ்குமாரையும் மற்றவர்களையும் வீரப்பன் விடுவித்தார். காட்டுக்குள் 108 நாட்கள் ராஜ்குமார் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா

முழுக்க முழுக்க இந்த சம்பவத்தை மையமாக வைத்து படத்தை எடுக்கின்றனர். ராம்கோபால் வர்மா இயக்குகிறார். இதற்கு 'த கில்லிங் வீரப்பன்' என பெயரிட்டுள்ளனர். இதில் வீரப்பனை தேடிப் பிடித்து கொலை செய்யும் போலீஸ் அதிகாரி வேடத்தில் ராஜ்குமார் மகன் சிவராஜ்குமார் நடிக்கிறார்.

முத்துலட்சுமி சம்மதம்

முத்துலட்சுமி சம்மதம்

இந்த படத்துக்காக தகவல்கள் திரட்ட வீரப்பன் மனைவி முத்து லட்சுமியை ராம்கோபால் வர்மா சமீபத்தில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குவது குறித்து ராம்கோபால் வர்மா கூறும் போது ‘மூன்று மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பனை பிடிக்க ரூ.600 கோடி செலவானது.

சுவாரஸ்யமான திருப்பங்கள்

சுவாரஸ்யமான திருப்பங்கள்

16 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் 15 வருடங்கள் தேடுதல் வேட்டை நடந்தது. 1200 போலீசார் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒசாமா பின்லேடனை விட 100 மடங்கு திருப்பங்கள் கொண்டது வீரப்பன் வாழ்க்கை.

வீரப்பன் பிடிப்பட்ட சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை படத்தில் கொண்டு வருவேன்," என்றார்.

தகவல்கள்

தகவல்கள்

இப்படத்துக்கான நடிகர்-நடிகை தேர்வு நடந்து வருகிறது. முதலில் இந்தப் படத்துக்கு ஒத்துழைப்பு மறுத்து வந்த முத்துலட்சுமியும், இப்போது தகவல்கள் தர சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Filmmaker Ram Gopal Varma has gotten in touch with slain 'sandalwood King' Veerappan's widow, Muthulakshmi to gather details for his upcoming film, Killing Veerappan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil