»   »  'வேலைக்காரன்' படத்தின் சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட அனிருத்!

'வேலைக்காரன்' படத்தின் சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட அனிருத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் படம் 'வேலைக்காரன்'. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்று இன்று மாலை வருவதாகக் கூறினார்கள். ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த அந்த அப்டேட் வெளிவந்தது.

ஒரே பாடலை இரண்டு விதமான எமோஷன்ஸ் சேர்த்து உருவாக்கியிருப்பதாக இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

2 இன் 1 சர்ப்ரைஸ்

'வேலைக்காரன்' படத்தின் 2 இன் 1 சர்ப்ரைஸ் இன்று மாலை அறிவிக்கப்படும் என சோனி மியூசிக் நிறுவனம் ட்வீட் செய்திருந்தது. அந்த அறிவிப்பால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமானார்கள். என்ன அறிவிப்பாக இருக்கும் என அந்த ட்வீட்டுக்கு ரிப்ளை செய்து வந்தனர்.

சர்ப்ரைஸ் வெளியானது

இந்நிலையில், 'வேலைக்காரன்' படத்தின் சர்ப்ரைஸ் வெளியானது. இந்த சர்ப்ரைஸை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். அதன்படி, 'வேலைக்காரன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் நவம்பர் 2-ம் தேதி வெளியிடப்படுகிறது.

நன்றி தெரிவித்த அனிருத்

நன்றி தெரிவித்த அனிருத்

' 'கருத்தவன்லாம் கலீஜாம்...' பாடலை பெரிய ஹிட்டாக்கியதற்கு நன்றி. அந்தப் பாடலுக்கு உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கவர் வீடியோக்களும், டான்ஸ் வீடியோக்களும் பண்ணி வெளியிட்டிருக்காங்க... எல்லோருக்கும் நன்றி' எனக் கூறியிருக்கிறார் அனிருத்.

இறைவா + உயிரே பாடல்

இறைவா + உயிரே பாடல்

'இறைவா மற்றும் உயிரே என ஒரே பாடலில் இரண்டு எமோஷன்களை வைத்து உருவாகியிருக்கிறோம். ஒன்று வாழ்க்கையையும், மற்றொன்று காதலைப் பற்றியும் இருக்கும். இது எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நவம்பர் இரண்டாம் தேதி இரண்டாவது பாடல் வெளியாகும்' எனக் கூறியிருக்கிறார் அனிருத்.

English summary
Sivakarthikeyan, Nayanthara, Fahad fasil are starring in an upcoming film 'Velaikkaran'. The team said that the surprise update of the film was coming this evening. Anirudh revealed that surprise announcement. Accordingly, the second single of the 'Velaikkaran' film will be released on November 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil