சினேகாவிற்க்காக புதிய போஸ்டர் ரெடி செய்த வேலைக்காரன் படக்குழு !!- வீடியோ
வேலைக்காரன் படத்தில் சினேகா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கதைக்கே திருப்புமுனையாக அமைந்த அந்த கேரக்டருக்காக தனது உடல் எடையை குறைத்து ப்ரோஸ்தடிக் மேக்கப் போட்டு நடித்தார். ஆனால் தான் நடித்த காட்சிகளில் பெரும்பான்மையானவை தூக்கப்பட்டு விட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் சொல்லியிருந்தார்.
சினேகா சொன்ன விஷயம் பரபரப்பு செய்தி ஆனது. எனவே சினேகாவை சமாதானப்படுத்த திட்டமிட்ட படக்குழு இன்று செய்தித்தாள்களில் வெளியிட்ட விளம்பரத்தில் சிவகார்த்திகேயனுடன் சினேகா படத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறது.
பட விளம்பரங்களில் சிவாவுக்குதான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. எனவே சினேகாவை சமாதானப்படுத்தத்தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள்
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.