twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேலைக்காரன் சிக்கல்... எப்படி தீர்க்கப் போகிறார் விஷால்?

    By Shankar
    |

    தமிழ் சினிமாவில் வியாபார வலிமை உள்ளவர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும் சங்க முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடந்தது இல்லை. அதன் வெளிப்பாடு தான் 'வேலைக்காரன்' நாளிதழ் முழுப் பக்க விளம்பரம். நாளிதழ்களில் கொடுக்கப்படும் திரைப்பட விளம்பரங்களை குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு வைத்திருக்கிறது. இந்த கட்டுப்பாட்டை மீறும் வகையில்தான் வேலைக்காரன் படத்திற்கு நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது.

    தன்னுடைய நண்பருடன் சேர்ந்து 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய சிவகார்த்திகேயன், தன்னுடைய இரண்டாவது தயாரிப்பாக வேலைக்காரன் படத்தை தயாரித்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதற்காக வேலைக்காரன் படத்தின் முழுப்பக்க விளம்பரம் நாளிதழ்களில் வெளியானது.

    Velaikkaran issue a big headache for Vishal

    வேலைக்காரன் படத்தின் தொலைக்காட்சி உரிமையைவாங்கியுள்ள தனியார் தொலைக்காட்சி பெயரில் கொடுக்கப்பட்ட அந்த விளம்பரம், தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்த, இதை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்ற சில தயாரிப்பாளர்கள், சம்பந்தபட்ட தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் புகார் கூறி நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    கடந்த நிர்வாகத்தின் போது சேனல்களோடு நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில்.... நிர்வாகத்தின் மூலமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெரிய தயாரிப்பாளர்கள் முழுப்பக்கம் விளம்பரம் தருவதால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் ஈடு கொடுக்க முடியாது என்பதால், கொண்டு வரப்பட்டதுதான் இந்த விளம்பரக் கட்டுப்பாடு. இதனை சிதைக்கும் வகையில் வேலைக்காரன் விளம்பரம் இருப்பதாகவே தயாரிப்பாளர்கள் சங்கம் கருதி, கால் பக்க விளம்பரம் வெளியிடவே சங்க கடுதாசி கேட்கும் அந்த முன்னணி தினசரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டது. தொலைக்காட்சி நிர்வாகம் கமர்சியல் விளம்பரக் கட்டணத்தில் வேலைக்காரன் விளம்பரத்தை வெளியிட கட்டணம் செலுத்தியதால் வெளியிட்டோம் என விளக்கம் கொடுத்தது தினசரி நிர்வாகம்.
    வேலைக்காரன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியுள்ள தொலைக்காட்சியோ ஒப்பந்த அடிப்படையில் மூன்று முறை முழுப்பக்க விளம்பரம் கொடுக்க வேண்டும் என ஒப்புக் கொண்டதால் நாங்கள் விளம்பரம் கொடுத்தோம் என தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளது.

    விவேகம் பட தயாரிப்பாளரும், சங்கத்தின் முன்னாள் தலைவருமான தியாகராஜன், "விளம்பரம் கொடுப்பதில் கட்டுப்பாடு கறாராக அமுல்படுத்த வேண்டும். அதற்குரிய முடிவு சங்கம் எடுக்க வேண்டும் அபராதம் என்பது மட்டுமே தீர்வாக இருக்காது," என சங்க தலைமையை வலியுறுத்தியுள்ளாராம். அபராதம் மட்டுமே என்றால் அதனை முன்னரே சங்கத்தில் செலுத்தி விட்டு விவேகம் பட முழுhd பக்க விளம்பரத்தை கொடுக்கலாமா எனவும் சங்க தலைமையிடம் கேட்டுள்ளாராம். சிவகார்த்திகேயன் படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியில் விஷால் உள்ளார். தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு நிதி உதவி செய்தவர்களில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது!

    English summary
    Sivakarthikeyan's Velaikkaran publicity issue is become a big headache for Vishal
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X