»   »  வேலைக்காரன்... வெளிநாட்டு வியாபாரத்தில் புதிய சாதனை!

வேலைக்காரன்... வெளிநாட்டு வியாபாரத்தில் புதிய சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படம் 2012ம் வருடம் வெளியானது. சிவகார்த்திகேயன் நாயகனாக அறிமுகமான இப்படத்தில்தான். அன்று இதன் வெளிநாட்டு விநியோக உரிமை சில லட்சங்களில் விலை போனது. அதே வருடம் வெளியான மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா பில்லா கில்லாடி ரெங்கா, எதிர் நீச்சல் படங்களின் சுமாரான வெற்றி வெளிநாட்டு வியாபாரிகள் கவனத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் இடம் பிடிக்க காரணமானது.

லட்சங்களில் விலை பேசப்பட்ட இவரது படங்கள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் விஸ்வரூப வெற்றி காரணமாக கோடிக்கணக்கில் விலை பேசும் நிலைக்கு உயர்ந்தது.

Velaikkaran overseas business

மான் கராத்தே, காக்கிச் சட்டை படங்கள் இந்த நிலையை தக்க வைத்துக் கொண்டன. பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட ரெமோ படத்தின் வெளிநாட்டு உரிமை கோடிகளில் வியாபாரமானது. அஜீத், விஐய் படங்கள் திரையிடப்படும் நாடுகளிலெல்லாம் ரெமோ படமும் திரையிடப்பட்டது.

இதுவரை ஒரு நபருக்கு மொத்தமாக வியாபாரம் செய்யப்பட்டு வந்தது சிவகார்த்திகேயன் படங்கள். ஆனால் இன்று வெளியான வேலைக்காரன் வெளிநாட்டு வியாபாரம் பழைய நடைமுறைகளை தகர்த்திருக்கிறது.

ரஜினி நடித்த கபாலி படத்தை கலைப்புலி தாணு 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனித்தனியாக வியாபாரம் செய்து புதிய நடைமுறையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார்

இந்த நடைமுறை அடுத்து வந்த அஜீத், விஜய் படங்களுக்கு கடைப்பிடிக்கப்பட்டது. இப்போது வேலைக்காரன் வெளிநாட்டு வியாபாரத்திலும் இதே நடைமுறை கையாளப்பட்டு சுமார் 10 கோடிக்கு விற்க்கப்பட்டுள்ளது.

ரஜினி, அஜீத், விஜய் இவர்கள் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் இணைந்திருப்பது கோடம்பாக்க ஹீரோக்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Sivakarthikeyan's new release Velaikkaran overseas right has soldout for a record Rs 10 cr

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X