»   »  படம் பார்த்தாச்சா..? 'வேலைக்காரன்' படத்தின் முக்கிய காட்சிகள் வெளியீடு!

படம் பார்த்தாச்சா..? 'வேலைக்காரன்' படத்தின் முக்கிய காட்சிகள் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்து வருகிறது.

வேலைக்காரன் படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சதிகளையும், அதற்கு பலியாகும் அப்பாவி நுகர்வோர், உணவு அரசியல் பற்றிப் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

'வேலைக்காரன்' படத்தின் முக்கியமான சில காட்சிகளை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளனர்.

மிருணாளினியாக நயன்தாரா

'உண்மை எது உண்மை' எனும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நயன்தாரா பேசும் காட்சிகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. நயன்தாராவின் இந்தப் பேச்சால் பயங்கர எதிர்ப்பு கிளம்பி, நயன்தாராவுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் அளவுக்கு இந்த விஷயம் பரவும்.

சிவகார்த்திகேயன் - நயன்தாரா

நயன்தாரா தன்னை அவதூறாகப் பேசிய அறிவை தேடிக்கொண்டிருக்கும்போது, சிவகார்த்திகேயன் மாட்டிக் கொள்வார். அவரிடமிருந்து தப்பிக்க ரோபோ சங்கர் தான் அறிவு என கோர்த்துவிட்டு அவரைப் போல மிமிக்ரி செய்து தப்பிப்பார். ஆர்.ஜே.பாலாஜி வந்து ஆட்டயைக் கலைத்து விடுவது க்ளைமாக்ஸ்.

மார்க்கெட்டிங்

சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களைக் கவரவும், அதிகமான பொருட்களை வாங்க வைக்கவும் நிறுவனங்கள் பயன்படுத்தும் யுக்திகளை ஃபகத் பாசில் சொல்லச் சொல்ல சிவகார்த்திகேயன் வியந்துபோய் கேட்பார். இந்தக் காட்சி ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

எவ்வளவு சம்பாதிச்சாலும்

எவ்வளவு சம்பாதிச்சாலும் சேமிக்க முடியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டு நடுத்தர மக்களை வதைப்பதாக சிவகார்த்திகேயன் பேசும் வசனம் இந்தப் படத்தில் இடம்பெறுகிறது.

ரோஹிணி - சிவகார்த்திகேயன்

'பெத்த தாய்க்கிட்ட கணக்கு பாக்குறவன்லாம் மனுசனே இல்லம்மா..." என சிவகார்த்திகேயன் ரோஹிணியிடம் பேசும் வசனம் உள்பட படத்தின் சில முக்கிய காட்சிகளும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

English summary
Sivakarthikeyan, Nayanthara starred 'Velaikkaran' directed by Mohan Raja is running successfully in theaters. Sivakarthikeyan and Fahad fasil's dialogues in velaikkaran movie got big applause. In this scenario, 'Velaikkaran' team is officially released some important scenes on YouTube.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X