»   »  'வேலைக்காரன்' செட்டை நேரில் பார்க்க வாய்ப்பில்லையா... இதோ 360 டிகிரி வீடியோ! #VelaikkaranSetVisit

'வேலைக்காரன்' செட்டை நேரில் பார்க்க வாய்ப்பில்லையா... இதோ 360 டிகிரி வீடியோ! #VelaikkaranSetVisit

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வேலைக்காரன்'. இப்படம் தற்போது பலரது பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவருகிறது.

இப்படத்திற்காக 8 ஏக்கரில் போடப்பட்ட குப்பம் செட் மிகப்பெரிய அளவில் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது. இந்த செட் கலை இயக்குநர் முத்துராஜாவின் கைவண்ணத்தில் பலரின் கடின உழைப்பால் உருவானது.

Velaikkaran slum set 360 degree video

கொலைகார குப்பம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட 'வேலைக்காரன்' பட செட்டில் சிறிய நெருக்கமான வீடுகள், முருங்கை மரம், விஜய் அஜித் படங்கள், முத்துக்குமார் ஓவியம், காரை பெயர்ந்த வீடுகள் என நுணுக்கமாக உருவாக்கி இருந்தனர். இந்த காட்சிகள் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

தற்போது வேலைக்காரன் படக்குழு இந்த 8 ஏக்கர் செட்டை, மாணவர்கள், மீடியா, ரசிகர்கள் என எல்லோரும் சென்று பார்வையிடுவதற்காக திறந்து வைத்துள்ளனர். நேற்று பலரும் சென்று 'வேலைக்காரன்' செட்டை பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் 'வேலைக்காரன்' குப்பம் செட்டை பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்காக, 360 டிகிரி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. படக்குழுவினரின் கடின உழைப்பு இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது.

English summary
'Velaikkaran' slum set was created by art director T.Muthuraj. Now, 'Velaikkaran' slum set has opened to public visit. A 360 degree video has been released for those who are not able to see this set.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil