twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைத் துளி

    By Staff
    |

    சென்னை:

    காற்றுக்கென்ன வேலி திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை தீர்ப்பாயம் அனுமதியளிப்பது பற்றிய முடிவை தாமதித்தால் தணிக்கையின்றி படம்வெளியிடப்படும் என்று இயக்குநர் பாரதிராஜா எச்சரித்துள்ளார்.

    பத்திரிக்கையாளரான இயக்குநர் புகழேந்தி இயக்கியுள்ள படம் காற்றுக்கென்ன வேலி. காயமடைந்த நிலையில் இலங்கையிலிருந்து தப்பி வரும் பெண்போராளி ஒருவருக்கும் அவருக்கு சிகிச்சையளிக்கும் டாக்டருக்கும் இடையே ஏற்படும் காதலைப் பற்றியதாகும்.

    போராளியைப் பற்றிய கதை என்று திரைப்பட தணிக்கை வாரியம் இப்படத்தை பரிசீலனைக் கமிட்டிக்கு அனுப்பியது. அக்கமிட்டி அதனை தீர்ப்பாயத்திற்குஅனுப்பியது. தீர்ப்பாயம் இன்னும் படத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

    போராளியைப்பற்றிய கதையல்ல, மனித நேயங்களை விளக்கவிரும்பும் ஒரு சித்திரமே இது என்கிறார் இயக்குநர் புகழேந்தி. படைப்பாளி தன் கருத்தைமக்களுக்கு சொல்ல முழு உரிமையுண்டு எனும் பாரதிராஜா, பிப்ரவரி 17க்குள் தீர்ப்பாயம் முடிவு சொல்லவில்லையெனில் திரைப்படம் தணிக்கையின்றிவெளியிடப்படும் என்றார்.

    திரைப்படத் தயாரிப்பாளர்கள், மனித உரிமை அமைப்பினர்கள், மற்றும் எழுத்தாளர்கள் அடங்கிய நடவடிக்கை குழுவின் சார்பில் தமிழ்த் திரைப்படதயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா இவ்வாறு அறிவித்துள்ளார்.

    யு.என்.ஐ.

    Read more about: censor tamilfilm tamilnadu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X