»   »  சந்திக்கு வந்த நந்தினி: கதை திருடும் சுந்தர் சி.... கதறும் இயக்குநர்! Exclusive

சந்திக்கு வந்த நந்தினி: கதை திருடும் சுந்தர் சி.... கதறும் இயக்குநர்! Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன் டிவியில் பெரும் ஆரவாரத்துடன் ஒளிபரப்பாகிவரும் நந்தினி மெகா தொடரின் கதை என்னுடையது என நடிகரும் இயக்குநருமான வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

நந்தினி மெகா தொடர் ஒரு பிரமாண்ட சினிமாவுக்கு இணையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் இப்போது நல்ல பிரபலமாகிவிட்டது.

Velmurugan claims Sundar C's Nandhini mega serial story rights

இந்த நிலையில் இந்தக் கதை தனக்குச் சொந்தமானது என்றும், தன்னிடம் கேட்டு வாங்கிய சுந்தர் சி, அதற்காக எதுவுமே தராமல் தொடரை ஒளிபரப்பிக் கொண்டிருப்பதாகவும் இயக்குநர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் சுந்தர் சி எனக்கு செஞ்சிட்டார். நந்தினி என்னோட கதை. இந்தக் கதையை என்கிட்ட வாங்கிட்டு அவர் சொன்னது, 'உங்களுக்கு பணம்தானே பிரச்சினை.. அதை நான் பாத்துக்கிறேன்.. உங்க குடும்பத்துக்கு தேவையானதைப் பாத்துக்கிறேன்'னு சொன்னார். ஆனால் அதில் எதையுமே அவர் செய்யல.

Velmurugan claims Sundar C's Nandhini mega serial story rights

ஆரம்பத்துல செய்யற மாதிரி செஞ்சி, கடைசில என்னை கழுத்தறுத்துட்டார். அண்ணாமலை டயலாக் மாதிரிதான். நண்பன் வேல்முருகனை எதிரியா பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டீங்கள்ல... இனி என்னை எதிரியா சந்திப்பீங்க.. கடவுள் உங்களுக்கு எல்லா தண்டனையும் கொடுப்பான். நந்தினி என் கதைன்னு உங்க வாயால சொல்ல வைப்பான். இது வேல்முருகனோட சத்தியம், எங்கம்மா, குழந்தைங்க மேல சத்தியம்..," என்றார் உணர்ச்சிமயமாக.

Velmurugan claims Sundar C's Nandhini mega serial story rights

இந்தப் புகாருக்கு இதுவரை சுந்தர் சி தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

English summary
Director Velmurugan has charged that director Sundar C has stolen his story for Nandhini.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil