»   »  கமிஷனர் அலுவலகத்திற்கு பின்வாசல் வழியாக வந்து போன வேந்தர் மூவிஸ் மதன்

கமிஷனர் அலுவலகத்திற்கு பின்வாசல் வழியாக வந்து போன வேந்தர் மூவிஸ் மதன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ. 90 கோடி மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள தயாரிப்பாளர் மதன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

எஸ்.ஆர். எம். மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுப்பதாக கூறி ரூ.90 கோடி மோசடி செய்து தலைமறைவானார் வேந்தர் மூவிஸ் மதன். திருப்பூரில் பதுங்கியிருந்த அவர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Vendhar movies Madhan comes to commissioner office

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மதனை ஜாமீனில் விட எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து ரூ.10 கோடி உத்தரவாதம் அளித்தார்.

இதையடுத்து மதன் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த மதன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்புறமாக வந்து கையெழுத்துபோட்டிவிட்டு அந்த வழியாகவே சென்றுவிட்டார்.

English summary
Vendhar movies Madhan who is out on bail has come to Chennai police commissioner office to sign in the register.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil