வெந்து தணிந்தது காடு… இப்பவே டிக்கெட்ட போடு: விறுவிறுப்பாக தொடங்கிய ஆன்லைன் ரிசர்வேஷன்
சென்னை: சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கெளதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வெந்து தணிந்தது காடு படத்தின் டிக்கெட் புக்கிங் தற்போது தொடங்கிய நிலையில், ரன்னிங் டைம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

சாதிக்குமா வெற்றிக் கூட்டணி?
விண்ணத்தாண்டி வருவாயா படம் மூலம் முதன்முறையாக இணைந்தது சிம்பு, கவுதம் மேனன், ஏஆர். ரஹ்மான் கூட்டணி. முதல் படத்திலேயே தரமான சம்பவம் செய்த இக்கூட்டணிக்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து இம்மூவரும் இணைந்த 'அச்சம் என்பது மடமையடா' படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், மூன்றாவது முறையாக சிம்பு, கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான் காம்போவில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு', வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விறுவிறுப்பாக தொடங்கிய ரிசர்வேஷன்
சிம்பு மூன்றுவிதமான கெட்டபுகளில் நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' ஆக்சன் ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் இரண்டா பாகம் வரும் என கவுதம் மேனன் கூறியுள்ளதால், முதல் பாகத்திற்கு பயங்கரமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் விறுவிறுப்பாக ரிசர்வேஷன் செய்து வருகின்றனர்.

காலை 5 மணி காட்சிக்கு எதிர்பார்ப்பு
FDFS எனப்படும் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏராளமான திரையரங்குகளில் காலை 5 மணி காட்சிக்கான டிக்கெட் முன்பதிவுகளும் ஆன்லைனில் தொடங்கியது. இதனால், சிம்பு ரசிகர்கள் வெறித்தனமாக ரிசர்வேஷன் செய்து வருகின்றனர். மாநாடு படத்திற்குப் பின்னர் சிம்புவின் மூவி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், சினிமா வட்டாரத்திலும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு ரன்னிங் டைம்?
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் 3 மணி நேரம் வரை ஓடும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் 3 மணி நேரம் ரன்னிங் டைமுடன் ரிலீஸாகிறது. இதில் சில படங்கள் ரசிக்கும் படி இருந்தாலும், 'கோப்ரா' போன்ற படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. இதனால், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications