»   »  'இந்த அநியாயத்தைக் கேளு மச்சி' விஷாலிடம் புலம்பிய வெங்கட் பிரபு

'இந்த அநியாயத்தைக் கேளு மச்சி' விஷாலிடம் புலம்பிய வெங்கட் பிரபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'இந்த திருட்டு விசிடி செய்பவர்களை தட்டிக்கேளு மச்சி' என்று நடிகர் விஷாலிடம் முறையிட்டிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. தொடர்ந்து சரோஜா, மங்காத்தா, கோவா போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர்.

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான பிரியாணி மற்றும் மாஸ் போன்ற படங்கள் பெரிதாக எடுபடவில்லை. இதனால் இயக்குநராக அறிமுகமான சென்னை 28 படத்தின் 2 வது பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

சென்னை 28

இன்னும் சென்னை 28 இரண்டாம் பாக படப்பிடிப்பு தொடங்கப் படவில்லை. ஆனால் அதற்குள் இப்படத்திற்கான லிங்கை திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் உருவாக்கி விட்டனர். இதனைக் கண்ட வெங்கட் பிரபு அதிர்ந்து போய் இந்த அநியாயத்தை எதிர்க்க உதவி செய் மச்சி என்று விஷாலிடம் முறையிட்டார்.

எல்லோரும் ஒன்றாக

இதற்கு நடிகர் விஷால் தனியாளாக எதுவும் செய்ய முடியாது. நாம் அனைவரும் சேர்ந்து வலுவான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று பதில் அளித்திருக்கிறார்.

கடுமையான

மேலும் இந்த திருட்டு விசிடியை ஒழிக்க வேண்டும் என்றால் வலிமையான நபர்களைக் கொண்டு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை

விஷாலின் பதிலுக்கு "இந்தத் திருட்டை தடுக்க திரையுலகினர் அனைவரும் ஒன்று சேருவார்கள்" என்று தான் நம்புவதாக வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.

English summary
Venkat Prabhu Asked help from Vishal Regarding Killed Piracy in Tamil Industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil