வலிமை டிக்கெட் வாங்கிட்டேன்... வெங்கட் பிரபுவிடம் கங்கை அமரன் என்ன கேட்டிருக்கார் தெரியுமா?
சென்னை : வலிமை படத்தின் முதல் நாள் முதல் ஷோவிற்கான டிக்கெட்டை தான் வாங்கி விட்டதாக சின்ன பிள்ளை போல சொல்லி உள்ளார் டைரக்டர் வெங்கட் பிரபு. அப்படின்னா எனக்காக இதை செய்ப்பா என கேட்டுள்ளார் அவரின் அப்பாவும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன்.
நடிகர், பாடகர், பாடலாசிரியர், டைரக்டர்,தயாரிப்பாளர் என பல திறமைகளைக் கொண்டுள்ளவர் வெங்கட் பிரபு. சென்னை 28 படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான வெங்கட் பிரபு பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். லேட்டஸ்டாக சிம்புவை வைத்து மாநாடு என்ற மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ளார். வசூலிலும் உலக அளவில் சாதனை படைத்துள்ளது.

100 வது நாளை நெருங்கும் மாநாடு
த்ரில்லர் ஆக்ஷன், டைம்லூப் கதையாக மாநாடு படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, தற்போது ரொமான்டிக் படமாக மன்மத லீலை படத்தை அசோக் செல்வனை ஹீரோவாக வைத்து இயக்கி வருகிறார். மாநாடு படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக 90 நாட்களை எட்டி உள்ளது. விரைவில் மாநாடு 100 வது நாளை கொண்டாட மாநாடு டீம் தயாராகி வருகிறது. மற்றொரு புறம், மன்மதலீலை படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வலிமை டிக்கெட் வாங்கிட்டேன்
இந்நிலையில் அஜித் நடித்த வலிமை படத்திற்கான ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ பார்ப்பதற்கான டிக்கெட்டை தான் வாங்கி விட்டதாக வெங்கட் பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த பலரும், சார்...எங்களையும் கூட்டிட்டு போங்க. நாங்களும் வாறோம். முதல் நாள் ஈவினிங் ஷோவிற்காவது டிக்கெட் வாங்கிக் கொடுங்க சார். நாங்களும் வாங்கிட்டோம்ல. படம் பார்த்து விட்டு வந்து எப்படி இருக்குன்னும் ட்வீட் போடுங்க சார் என கேட்டுள்ளனர்.

கங்கை அமரன் வைத்த கோரிக்கை
ஆனால் வெங்கட் பிரபுவின் இந்த ட்வீட்டை பார்த்து விட்டு, அவரது அப்பாவும், பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன், பிரபு...பிரேம்ஜியையும் கூட்டிட்டு போப்பா என ட்வீட் செய்துள்ளார். இவர்களின் செல்ல சண்டையையும் ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். அட ஏன்ப்பா சண்டை போட்டுக்கிறீங்க. பொறுமையா போய் படத்த பார்த்துட்டு வாங்கப்பா என கமெண்ட் செய்துள்ளனர்.

அட ஏம்ப்பா சண்டை போடுறீங்க
அஜித்தின் தீவிர ரசிகரான வெங்கட் பிரபு, அஜித்தின் 50 வது படமான மங்காத்தா படத்தை இயக்கினார். தற்போது மங்காத்தா 2 எடுக்கும் பிளானும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அஜித் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி, செம பிஸியாக இருந்து வருவதால் தான், மங்காத்தா 2 எண்ணத்தை ஒத்திவைத்துள்ளாராம் வெங்கட் பிரபு. இதற்கிடையில் பில்லா 3 படமும் வர போவதாக வேறு தகவல் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











