»   »  கயல் சந்திரனை 'காமெடி சந்திரனாக' மாற்றப்போகும் வெங்கட் பிரபு!

கயல் சந்திரனை 'காமெடி சந்திரனாக' மாற்றப்போகும் வெங்கட் பிரபு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கயல்' சந்திரனை ஹீரோவாக வைத்து வெங்கட் பிரபு அடுத்த படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆரம்பத்தில் வளரும் நடிகர்களை வைத்து படமெடுத்து வந்த வெங்கட் பிரபு சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களை வைத்துப் படமெடுத்து கையை சுட்டுக் கொண்டார்.

தற்போது தனது திரைப்பயணத்தை தொடங்கி வைத்த 'சென்னை 28' படத்தின் 2 வது பாகத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து 'கயல்' சந்திரனை வெங்கட் பிரபு இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

Venkat Prabhu next Direct Kayal Chandran

முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜேஷ் எழுத, வெங்கட் பிரபு இயக்கப் போகிறாராம். இதனால் முழுக்க ஒரு பொழுதுபோக்கு படமாக இப்படத்தின் கதை இருக்கும் என்று கூறுகின்றனர்.

மற்ற நடிகர்களைத் தேர்வு செய்தபின் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரன் தற்போது 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

English summary
Sources Said Venkat Prabhu Team up With Kayal Chandran for his next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil