மங்காத்தா 2 விற்காக என்னுடைய முதல் பிளான் இதுதான்...ரசிகர்களை மிரள வைத்த வெங்கட் பிரபு

சென்னை : மங்காத்தா 2 படத்திற்காக முதன் முதலில் தான் போட்ட பிளான் பற்றி வெளிப்படையாக, முதல் முறையாக பேசி உள்ளார் டைரக்டர் வெங்கட் பிரபு. இதை கேட்டு ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில், வேற லெவல் பிளானா இருக்கே என சொல்லி உள்ளனர்.

அஜித் நடித்தின் 50வது படமான மங்காத்தா படத்தை இயக்கியவர் டைரக்டர் வெங்கட் பிரபு. இந்த படம் 2011 ம் ஆண்டு ரிலீசானது. இந்த படத்தில் நெகடிவ் ரோலில் நடித்திருந்தார் அஜித். இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றத்துடன் அஜித்தின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

மங்காத்தா 2 இயக்குவீங்களா

மங்காத்தா 2 இயக்குவீங்களா

வெங்கட் பிரபு தற்போது மாநாடு, மன்மதலீலை படங்களின் வெற்றியை தொடர்ந்து முதல் முறையாக நாக சைதன்யாவை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்க போகிறார். என்சி22 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக வெங்கட் பிரபுவிடம் அஜித்துடன் மீண்டும் இணைந்து மங்காத்தா 2 படத்தை இயக்குவீர்களா என கேட்டு வருகின்றனர். இந்த கேள்விக்கு சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் ஓப்பனாக பதிலளித்துள்ளார் வெங்கட் பிரபு.

என்னுடைய முதல் பிளான் இது தான்

என்னுடைய முதல் பிளான் இது தான்

சென்னையில் கல்லூரி விழா ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, மங்கத்தா 2 படத்தை இயக்க வேண்டும் என நினைத்ததும் எனது முதல் பிளான், அந்த படத்தில் அஜித் - விஜய் இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்பது தான். அவர்கள் இருவரையும் மனதில் வைத்து தான் கதையை உருவாக்கினேன். சரியான நேரம் வரும் போது இது பற்றி அவர்கள் இருவரிடமும் பேசி முடிவு செய்யலாம் என நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போனது.

நெகடிவ் ரோலில் அஜித்தா

நெகடிவ் ரோலில் அஜித்தா

சரி, அஜித்தை வைத்தே மங்காத்தா 2 படத்தை எடுத்து விடலாம் என தனது டீமுடன் பேசி முடிவு செய்துள்ளார் வெங்கட் பிரபு. 2019 ம் ஆண்டு ஐதராபாத்தில் தற்செயலாக அஜித்தை சந்தித்த போது இது பற்றி பேசி உள்ளார். அப்போது அவர் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் தற்போது வளர்ந்து பெரிய ஸ்டாராகி விட்ட அஜித், நெகடிவ் ரோலில் நடிப்பாரா என்ற தயக்கமும் இருந்ததாம். ஆனால் அஜித், நேர்கொண்ட பார்வை படத்தை முடித்த உடனேயே வலிமை படத்தில் கமிட்டாகி நடிக்க போய் விட்டார்.

பிஸியான ஸ்டார்கள்

பிஸியான ஸ்டார்கள்

தற்போது வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் ஏகே 61, அதை முடித்ததும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படங்களில் நடிக்க உள்ளார். அதே போல் விஜய்யும் தளபதி 66 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதை முடித்ததும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் தளபதி 67 பற்றிய பேச்சுக்கள் அடிபட்டு கொண்டிருக்கிறது. தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க போவதாகவும் கூறப்படுகிறது.

மங்காத்தா 2 மாஸா இருக்கும் போல

மங்காத்தா 2 மாஸா இருக்கும் போல

இதனால் அஜித் - விஜய்யை இணைத்து மங்காத்தா 2 எடுக்க வேண்டும் என்ற வெங்கட் பிரபுவின் பிளான் வெயிட்டிங்கில் உள்ளதாம். அஜித், விஜய், வெங்கட் பிரபு மூவருமே அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டதால் மங்காத்தா 2 பற்றிய முடிவை விரைவில் எடுக்க உள்ளதாகவும் வெங்கட் பிரபு கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X