»   »  மங்காத்தா பற்றி இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன வெங்கட் பிரபு

மங்காத்தா பற்றி இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன வெங்கட் பிரபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா படம் பற்றி ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா உள்ளிடோர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் மங்காத்தா. வெங்கட் பிரபவுக்கும் சரி, அஜீத்துக்கும் சரி இது மறக்க முடியாத படமாக அமைந்தது.

இந்நிலையில் மங்காத்தா பற்றிய ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார் வெங்கட்.

மங்காத்தா

மங்காத்தா

மங்காத்தா படத்தின் கதை ஹாலிவுட் படம் ஒன்றில் இருந்து சுடப்பட்டது என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தின் கதை பற்றிய ரகசியத்தை தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

சரோஜா

சரோஜா

மங்காத்தா படத்தின் ரகசியம் பற்றி இதுவரை நான் யாரிடமும் கூறியது இல்லை. தற்போது கூறுகிறேன். மங்காத்தா எனது சரோஜா படத்தின் உல்டா தான் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

அஜீத்

அஜீத்

சரோஜா படத்தில் சம்பத் எப்படி படம் துவங்கியதில் இருந்து வில்லனாக இருப்பாரோ அதே போன்று தான் மங்காத்தாவில் அஜீத். ஜெயராமின் கதாபாத்திரம் தான் அர்ஜுனுடையது. முதலில் நல்லவராக வந்து பின் வில்லனாக மாறுவது.

சென்னை 28- 2

சென்னை 28- 2

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான சென்னை 28ன் இரண்டாம் பாகம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் வெற்றி பெற பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

English summary
Director Venkat Prabhu has revealed the secret about his superhit movie Thala starrer Mankatha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil