»   »  எங்க ஏரியா உள்ள வராத... மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறது ‘சென்னை 28’!

எங்க ஏரியா உள்ள வராத... மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறது ‘சென்னை 28’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெங்கட் பிரபு தனது வெற்றிப்படமான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு ரிலீசான படம் சென்னை 28. ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜய் வசந்த் , விஜயலட்சுமி, சம்பத் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது.

தனது முதல்படமான இதில், உள்ளூர் கிரிக்கெட்டை வித்தியாசமாக, அதே சமயம் விறுவிறுப்பாக படமாக்கியிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.

சுறுசுறுப்பான திரைக்கதை...

சுறுசுறுப்பான திரைக்கதை...

இப்படத்தில் நடித்த நடிகர்கள் தற்போது தனித்தனியாக ஹீரோக்களாக ஜொலித்து வருகின்றனர். சுறுசுறுப்பான திரைக்கதை, இளமை, காமெடி என இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதரவுகள் குவிந்தன.

முன்னணி இயக்குநர்...

முன்னணி இயக்குநர்...

இப்பட வெற்றியைத் தொடர்ந்து தமிழில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரானார் வெங்கட் பிரபு. கடைசியாக இவர் சூர்யா நடிப்பில் மாசு என்கிற மாசிலாமணி படத்தை எடுத்திருந்தார்.

இரண்டாம் பாகம்...

இரண்டாம் பாகம்...

அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், தனது வெற்றிப்படமான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார் வெங்கட் பிரபு.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்...

பர்ஸ்ட் லுக் போஸ்டர்...

இந்நிலையில், தற்போது, 'சென்னை 28' இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ப்ளாக் டிக்கெட்...

ப்ளாக் டிக்கெட்...

இப்படத்துக்கு யுவன் இசையமைக்க இருக்கிறார். ப்ளாக் டிக்கெட் நிறுவனம் மூலமாக இயக்குநர் வெங்கட்பிரபுவே இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

அதே டீம்...

அதே டீம்...

விரைவில் இப்படத்தில் பழைய சென்னை 28 டீமே நடிக்கிறதா, அல்லது புதிய நடிகர்களா என்பது குறித்து வெங்கட் பிரபு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்த்து...

சென்னை 28 படத்தின் இரண்டாம் பாக போஸ்டர் மற்றும் வீடியோவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Director Varun Venkat Prabhu took to micro-blogging site Twitter to reveal the first look of the film "Chennai 28 Part 2" by tweeting: "#vp7 official poster #ch28 #Reunion #sequel #2ndinnings thisisysr Premgiamaren Cinemainmygenes vasukibhaskar".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil