»   »  சென்னை 28- இரண்டாம் பாகம் கைகொடுக்குமா வெங்கட் பிரபுவுக்கு?

சென்னை 28- இரண்டாம் பாகம் கைகொடுக்குமா வெங்கட் பிரபுவுக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுமார் 10 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட சென்னை 28, தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. இன்றைக்கும் விரும்பிப் பார்க்கக்கூடிய படமாக அது திகழ்கிறது.

கிரிக்கெட் மற்றும் நட்பு என்னும் இரண்டு மிக முக்கிய தூண்களின் மேல் எழுப்பப்பட்ட கதை அது. ஒரு சிறு குழந்தையிடம் கேட்டால் கூட, பத்து நண்பர்களின் வாழ்க்கையும், கிரிக்கெட் மேட்ச்சும் என படத்தின் கதையை பளிச்சென்று சொல்லும்.


தற்போது, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துள்ளார் வெங்கட் பிரபு.


Venkat Prabhu's strong hope on Chennai 28 sequel

இந்தப் படத்தை ஆரம்பிப்பதாக வெங்கட் பிரபு அறிவித்ததுமே ஏகப்பட்ட வாழ்த்துகள் குவிந்தனவாம்.


முதல் பாகத்தில் நடித்த 10 நண்பர்களும் இப்பொழுது திருமணமாகி, சினிமாஒவ்வொரு மூலையில் திருமணமாகி சென்று விட்டனர். சிலர் சினிமாவில் பிஸியாகிவிட்டனர்.


10 ஆண்டுகளுக்குப் பிறகு நடுத்தர வயதினை நெருங்கி விட்ட இந்த ஆர்ஏ புரம் ஷார்க்ஸ் மீண்டும் ஒன்று சேர்ந்தால்? யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைக்கிறார்.


முதல் இன்னிங்ஸில் செஞ்சுரி அடிச்சிட்டேன். இந்த இரண்டாம் இன்னிங்ஸில் டபுள் செஞ்சுரி அடிக்காம விடமாட்டேன் என்கிறார் வெங்கட் பிரபு. சினிமா இப்போதுள்ள சூழலில் ஆஃப் செஞ்சுரி அடித்தாலே பெரிய வெற்றிதான்!

English summary
Venkat Prabhu hopes that he would hit a double century in the second part of Chennai 28.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil