சிம்பு ஒன்றும் மோசமானவர் இல்லை...சர்டிஃபிகேட் கொடுத்த பிரபல டைரக்டர்

சென்னை : சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே நேரத்தில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவருக்கு போடப்பட்ட ரெட் கார்டு சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டதால் நிறைய பட வாய்ப்புக்கள் சிம்புவிற்கு வர துவங்கி உள்ளது.

ரெட் கார்டு விவகாரம் காரணம் பல காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு, உடல் எடையை செமயாக குறைத்து, ஈஸ்வரன் படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் சிம்பு மீது நம்பிக்கை வைத்து அவரை மாநாடு படத்தில் நடிக்க வைத்தனர் டைரக்டர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும்.

அடுத்தடுத்த படங்களில் சிம்பு

அடுத்தடுத்த படங்களில் சிம்பு

மற்றவர்கள் கூறிய குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கும் விதமாக, தன்னை மாற்றிக் கொண்டு சரியான நேரத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடிக்க உள்ளார் சிம்பு.

 தள்ளி போகும் ரிலீஸ்

தள்ளி போகும் ரிலீஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனாலும் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போய் கொண்டிருக்கிறது. மே 14, அக்டோபர் 2, அக்டோபர் 14, நவம்பர் 4, நவம்பர் 25 என பல தேதிகள் கூறப்பட்டு, பிறகு தள்ளி வைக்கப்பட்டது. சென்சார் போர்டும் யு/ஏ சான்று வழங்கி விட்டது. இருந்தும் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படவில்லை.

 முழு வீச்சில் ஏற்பாடுகள்

முழு வீச்சில் ஏற்பாடுகள்

லேட்டஸ்ட் தகவலாக உலகம் முழுவதும் நவம்பர் 27 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சிம்பு உள்ளிட்டோர் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சிம்பு மோசமானவர் இல்லை

சிம்பு மோசமானவர் இல்லை

இந்நிலையில் சிம்புவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து டைரக்டர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். அதில், எனக்கும் சிம்புவிற்கும் நல்ல பாண்ட் உள்ளது. சிலர் சொல்வதைப் போல் அவர் ஒன்றும் அவ்வளவு மோசமானவர் இல்லை. அவர் கிஃப்டட் நடிகர். அவருடன் ஷுட்டிங் நடத்துவது எனக்கு எப்போதும் ஈஸியாவே இருந்தது.

உடல் எடையை குறைத்த சிம்பு

உடல் எடையை குறைத்த சிம்பு

ஈஸ்வரன் படத்திற்காக அவர் உடல் எடை குறைத்தது எனக்கு மிகப் பெரிய சர்ப்ரைசாக இருந்தது. வெறும் மூன்று அல்லது நான்கு வாரங்களிலேயே மிகப் பெரிய அளவில் உடல் எடையை குறைத்துள்ளார். ஆரம்பத்தில் கடுமையாக உழைத்து, பல போராட்டங்களைத் தாண்டி உடல்எடையை குறைத்துள்ளார் சிம்பு.

ஆச்சரியப்பட வைத்த சிம்பு

ஆச்சரியப்பட வைத்த சிம்பு

சிம்புவின் இரண்டு வித்தியாசமான லுக்குகளை ஒரே படத்தில் கையாண்டுள்ளேன். எவ்வளவு குண்டாக இருந்த சிம்பு, இப்படி ஸ்லிம்மாகி விட்டாரே என அவரது ரசிகர்கள் மிகப் பெரிய ஆச்சரியத்தில் இருந்து வருகிறார்கள். அதே ஆச்சரியத்தை படம் முழுவதும் ரசிகர்களுக்கு தர வேண்டும் என்பதற்காக சிம்புவின் கேரக்டரை வைத்துள்ளோம்.

படத்தை பாதிக்காது

படத்தை பாதிக்காது

ஒரு நண்பராக எனக்கு அவரை பற்றி சில ரகசியங்கள் தெரியும். ஆனால் அந்த ரகசியங்கள், ரகசியங்களாகவே வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அதை வெளியிடவில்லை. அதனால் அதிகம் நான் சொல்ல மாட்டேன். படத்தின் ரிலீஸ் தள்ளி போவது படத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. கதை மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X