twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நோட்டாவுக்கு ஓட்டு போட்டால் என்ன விபரீதம் நடக்கும்?: வெங்கட் பிரபு விளக்கம்

    By Siva
    |

    Recommended Video

    Director Venkat Prabhu about voting: நோட்டாவுக்கு ஓட்டு போட்டால் என்ன விபரீதம் நடக்கும்- வீடியோ

    சென்னை: நாளை நடைபெற உள்ள தேர்தலில் நோட்டாவுக்கு அதிக அளவில் ஓட்டு போட்டால் என்ன விபரீதம் நடக்கும் என்பதை எடுத்துரைத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

    நாளை லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் தமிழகத்தில் பரபரப்பாக உள்ளது. பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள்.

    இவங்க யாருமே வேண்டாம் என்று நோட்டாவுக்கு வாக்களிக்கவும் பலர் தயாராகி இருப்பார்கள். இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    ரூ. 2 கோடி கொடுத்தும் 'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி? ரூ. 2 கோடி கொடுத்தும் 'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி?

     5 ஆண்டுகள்

    5 ஆண்டுகள்

    நாம் போடும் ஒவ்வொரு ஓட்டும் அடுத்த 5 வருஷத்திற்கு நாம் சுவாசிக்கும் காற்று, சாப்பாடு, தண்ணீர், எல்லாத்தையும் நிர்ணயிக்கப் போகிறது. வெறும் ரூ. 1000, ரூ. 2000 ஏன் ரூ. 1 லட்சம் அல்லது ரூ. 1.5 லட்சம் கொடுத்தால் கூட உங்களின் ஓட்டை விற்று விடாதீர்கள். உங்களிடம் காசு கொடுத்து ஓட்டு வாங்கும் அவர், தான் சம்பாதிக்க வேண்டும் என்று பார்ப்பாரா இல்லை உங்களுக்கு நல்லது செய்யணும் என்று பார்ப்பாரா?.

     நோட்டா

    நோட்டா

    இவர் சரியில்லை. இவரை விட அவர் ஊழல் ஜாஸ்தின்னு சொல்லி யோசித்துவிட்டு நோட்டாவுக்கு ஓட்டு போடுபவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். உங்க ஏரியாவில் நோட்டா ஜெயித்தது என்றால் நோட்டாவுக்கு அடுத்தபடியாக எந்த வேட்பாளர் ஜெயித்தாரோ அவரை தான் தேர்வு செய்து வெற்றி பெற்றவராக அறிவிப்பார்கள்.

    ஏரியா

    ஏரியா

    அவர் சரியில்லை இவர் சரியில்லை என்று. ஏன் அவரும், இவரும் தான் உங்க தொகுதியில் இருக்கிறார்களா? ஒரு படம் பார்க்கணும் என்றாலே 10 விமர்சனங்களை பார்த்துவிட்டு அதன் பிறகு டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறீர்கள். உங்க ஏரியாவில் உங்களை அடுத்த 5 வருஷத்துக்கு ஆளப் போறவங்க எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு 5 நிமிஷம் இன்டர்நெட்டில் போய் அவர்களின் கொள்கைகள், அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படிப்பட்டவர்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பதை கொஞ்சம் தெரிந்து கொண்டு ஓட்டு போடலாமே.

    பெண்கள்

    பெண்கள்

    சின்ன வயதில் நாம் ரோட்டில் தான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். இப்போ, நம் குழந்தைகளை வெளியே அனுப்ப முடிகிறதா?. அவர்கள் டியூஷனுக்கு சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பாக பெண்களை அனுப்புகிறோம். அவர்களுக்கே இப்போ பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் தப்புத் தப்பான நியூஸ். ரொம்ப கஷ்டமாக இருக்கு.

    நிஜம்

    நான் அணிந்திருக்கும் டி-சர்ட்டில் சிக்ஸ் பேக் கமிங் சூன் என்று எழுதியிருப்பதில் எவ்வளவு பெரிய பொய் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா. அதே மாதிரி தான் உங்களின் வேட்பாளர் சொல்வதிலும் எவ்வளவு பொய், எவ்வளவு நிஜம் இருக்கிறது என்பதை கொஞ்சம் கவனமாக கேட்டால் உங்களுக்கே தெரியும். ஏப்ரல் 18 அன்று கண்டிப்பாக ஓட்டு போடுங்க, சரியான ஆளை பார்த்து ஓட்டு போடுங்க. நான் யார் என்று தேர்வு செய்துவிட்டேன், நீங்க என்று தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

    English summary
    Director Venkat Prabhu has posted a video on twitter explaining the danger of NOTA emerging winner.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X