»   »  'மங்காத்தா ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும்.. சென்னை 28 அளவுக்காவது ஒரு ஹிட் வேணும்!'

'மங்காத்தா ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும்.. சென்னை 28 அளவுக்காவது ஒரு ஹிட் வேணும்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாசு படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு அவரும் சரி, அவரது பார்ட்டி டீமும் சரி.. மையமாகச் சிரித்து வைத்தார்கள்.

அஜீத்தை இயக்கப் போகிறார்.. இல்லையில்லை மீண்டும் சூர்யாவை இயக்கப் போகிறார் என்றெல்லாம் குத்து மதிப்பாகச் சொல்லி வந்தார்கள்.

Venkat Prabhu to team up with Chennai 28 team

இப்போது புதிய செய்தி..

தான் இயக்குநராக அறிமுகமான சென்னை 28 படத்தின் தொடர்ச்சியை அதே டீமுடன் இணைந்து உருவாக்கப் போகிறார் வெங்கட் பிரபு என்பதுதான் அந்த செய்தி.

சென்னை 28 தமிழ் திரையுலகில் பெரும் மாற்றத்தையே நிகழ்த்தியது. தொடர்ந்து சரோஜா, கோவா போன்ற படங்களைத் தந்தவர், மங்காத்தாவில் அஜீத்தை இயக்கியதன் மூலம் நட்சத்திர இயக்குநரானார். ஆனால் இந்த பதவி உயர்வு வந்த நேரம், அவர் அடுத்தடுத்து இயக்கிய இரு படங்கள் பிரியாணி, மாசு பெரிய அளவில் போகவில்லை.

இப்போது வெங்கட் பிரபுவுக்கு உடனடித் தேவை ஒரு வெற்றி. அது மங்காத்தா ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும், சென்னை 28 அளவுக்காவது இருந்தால் போதும்!

English summary
According to reports, Venkat Prabhu will team up with Chennai 28 crew again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil