Don't Miss!
- News
நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக இருந்த 10 வயது சிறுவன்.. பெத்தவங்க கண் முன்னே நடந்த அந்த கோர சம்பவம்
- Lifestyle
இந்த பொருட்களை எவ்வளவு வருஷம் வேணாலும் வைத்து சாப்பிடலாமாம் கெட்டேப்போகாதாம் தெரியுமா?
- Finance
தடைகளை தவிடு பொடியாக்கும் P&G நிறுவனத்தின் HMW உத்தி..!
- Technology
சுத்தப்படாது., நம்ம வாங்கிற வேண்டியது தான்- டுவிட்டரை வாங்கும் முயற்சியில் அமெரிக்க பிரபலம்: மஸ்க் பதில்!
- Automobiles
லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?
- Sports
இந்திய அணி விரைவில் அறிவிப்பு.. யார் யாருக்கு வாய்ப்பு? முற்றிலும் இளம் படையை களமிறக்கும் பிசிசிஐ
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்த பிளாக் பஸ்டர் ரெடி...வெங்கட் பிரபுவின் அடுத்த ஹீரோ யாருன்னு தெரியுமா?
சென்னை : மாநாடு, மன்தமத லீலை படங்களைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்கும் வேலைகளில் டைரக்டர் வெங்கட் பிரபு இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரின் அடுத்த பட ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, டைரக்டரானவர் வெங்கட் பிரபு. சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமான வெங்கட் பிரபு, அஜித்தின் மங்காத்தா உள்ளிட்ட பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி உள்ளார்.
கீர்த்தி
சுரேஷின்
காஸ்ட்லியான
டிரஸ்..
இத்தனை
லட்சமா?..
அப்படி
என்ன
ஸ்பெஷல்
!

பிளாக்பஸ்டர் மாநாடு
கடந்த ஆண்டு சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு படம் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. டைம் லூப்பை மையமாகக் கொண்ட இந்த படம் 100 கோடி வசூல், 100 வது நாள் என ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து ரொமான்டிக் படமாக இவர் இயக்கிய மன்மத லீலை படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

வெங்கட் பிரபுவின் அடுத்த படம்
அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களைக் கொடுத்த வெங்கட் பிரபு, தற்போது தெலுங்கு படம் ஒன்றை இயக்கி உள்ளார். இதை முடித்த கையோடு, மீண்டும் மெகா பட்ஜெட் தமிழ் படம் ஒன்றை இயக்க போகிறாராம். இதற்காக டாப் ஹீரோ ஒருவரிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டாராம் வெங்கட் பிரபு. இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை சீக்கிரம் துவங்க போகிறாராம்.

அடுத்த ஹீரோ இவரா
அப்படி வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்க போவது வேறு யாரையும் அல்ல. சிவகார்த்திகேயனை தான். வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இணையும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க போகிறதாம். வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் தற்போது கமிட்டாகி உள்ள படங்களின் வேலைகளை முடித்த பிறகு 2023 ம் ஆண்டின் துவக்கத்தில் இவர்கள் இணையும் புதிய படத்தின் ஷுட்டிங் ஆரம்பிக்கப்பட உள்ளதாம்.

இத்தனை படங்கள் வெயிட்டிங்கா
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் எஸ்கே 20 படத்தில் நடத்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் ஷுட்டிங்கும் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறதாம். இதைத் தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் எஸ்கே21 படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட்டாகி உள்ளார். இந்த படங்களை முடித்த பிறகு வெங்கட் பிரபு படத்தில் இணைய உள்ளார் சிவகார்த்திகேயன்.