»   »  அஜீத்தாம், விஜய்யாம், சிம்புவாம்: பெரிய்ய லிஸ்ட் போடும் வெங்கட் பிரபு

அஜீத்தாம், விஜய்யாம், சிம்புவாம்: பெரிய்ய லிஸ்ட் போடும் வெங்கட் பிரபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தை வைத்து மங்காத்தா 2, சிம்புவுடன் பில்லா 2, விஜய்யுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்று பெரிய திட்டத்துடன் உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு தற்போது சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளை முடிப்பதில் பிசியாக உள்ளார். 2007ம் ஆண்டு வெளியான சென்னை 28 ஹிட் படத்தின் தொடர்ச்சியான இதை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது எதிர்கால திட்டங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.

அஜீத்

அஜீத்

தல அஜீத்தை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் அஜீத்துடன் சேர்ந்து மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆசையாக உள்ளார் வெங்கி.

விஜய்

விஜய்

இளைய தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க விரும்புகிறார். அந்த படத்தில் விஜய்யை கூலாக, கேஷுவலாக காட்ட ஆசைப்படுகிறார். உங்க ஆசை நிறைவேறட்டும் வெங்கட் பிரபு.

சிம்பு

சிம்பு

ஏற்கனவே அஜீத்தின் நடிப்பில் பில்லா 2 படம் வெளியானது. இந்நிலையில் பில்லா 2 என்ற தலைப்பில் சிம்புவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்கிறார் வெங்கட் பிரபு. பில்லாவையே வேறு மாதிரி காட்டப் போகிறாராம்.

சரோஜா 2

சரோஜா 2

வெங்கட் பிரபு சரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக கூறப்பட்டது. ஆனால் தான் சரோஜா 2 படத்தை இயக்குவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Director Venkat Prabhu wants to make films with Ajith, Vijay and Simbu. All the best Venky.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil