»   »  இங்க ஆக்சிடென்ட் ஆகியிருக்கு... அங்க வெங்கட்பிரபு சொல்றதை பார்த்தீங்களா?

இங்க ஆக்சிடென்ட் ஆகியிருக்கு... அங்க வெங்கட்பிரபு சொல்றதை பார்த்தீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபுவின் டீம் எப்போதும் ஜாலியானது. அவர் எப்போதும் கூலாக இருப்பதால் அவர் படத்தில் பணியாற்றுபவர்கள் மத்தியில் ஜாலியான மனிதர் என்கிற பெயர் உண்டு.

என்னதான் ஜாலியான மனிதர் என்றாலும் ஷூட்டிங் என வந்துவிட்டால் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் ஆகிவிடுவார். அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் அவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது இயக்கி வரும் படம் 'பார்ட்டி'. இந்தப் படத்தின் மூலம் இவரது ஃபேவரிட் டீம் இணைகிறது. ஜெய், ப்ரேம்ஜி, வைபவ் உள்பட வெங்கட்பிரபுவின் நண்பர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.

பார்ட்டிக்கு பார்ட்டி :

பார்ட்டிக்கு பார்ட்டி :

இந்நிலையில் 'பார்ட்டி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து படக்குழு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ஹோட்டலில் பார்ட்டி அளித்துள்ளது. இதில் நடிகர்கள் ஜெய், பிரேம்ஜி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

 கார் விபத்து :

கார் விபத்து :

இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட ஜெய் தனது ஆடி காரில் ப்ரேம்ஜியையும் அழைத்துக்கொண்டு கிளம்பியுள்ளார். போதையில் ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து அடையாறு பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

 ஜெய் கைது :

ஜெய் கைது :


குடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் நடிகர் ஜெய் கைது செய்யப்பட்டார். பிறகு ஜெய் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தமிழக காவல்துறை ஜெய்யின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.

 வெங்கட்பிரபுவிடம் ட்விட்டரில் :

வெங்கட்பிரபுவிடம் ட்விட்டரில் :

இன்று வெங்கட்பிரபு சிங்கப்பூரில் இருப்பதாக ட்வீட் செய்திருந்தார். அதில் ரிப்ளை செய்த ஒருவர் 'இங்க உங்க தம்பி ஆக்சிடென்ட் பண்ணிப்பாப்ள ப்ரோ' எனக் கூறினார்.

கூல் வெங்கட்பிரபு :

அதற்கு வெங்கட்பிரபு, ‘ஓஹோ அதுக்குள்ள 'பார்ட்டி' படத்துக்கு ப்ரோமோஷன் ஆரம்பிச்சிட்டாங்களா?' என கூலாக பதில் அளித்துள்ளார்.

நல்ல குடும்பம் :

அவரது கூலான பதிலைக் கேட்ட ரசிகர் ஒருவர், 'நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்' என கலாய்த்திருக்கிறார்.

பொழைச்சுக்குவீங்க :

இப்படி அழகா சமாளிச்சா நீங்க பொழைச்சுக்குவீங்க சார் என ஒருவர் கூறியிருக்கிறார்.

இதுக்கு எதுக்கு :

ஜெய் மற்றும் ப்ரேம்ஜியை குறிப்பிட்டு, இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா திரியணும் என ஒருவர் கலாய்த்து வடிவேலு - சிங்கமுத்து காமெடி போட்டோவை பதிவு செய்திருக்கிறார் ஒருவர்.

அடுத்த தளபதியா..? :

உங்க அக்கப்போர் தாங்க முடியல... அடுத்த தளபதிய இப்படி ஆக்சிடென்ட் பண்ணிட்டீங்களே...

English summary
Party was given by the team after 'party' film's shooting ended. After the party's finish, Jai and Premji clashed their car by drunk and drive. Venkat prabhu answered handled this matter as very cool.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil