»   »  சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு - 2... பூஜையுடன் தொடங்கியது!

சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு - 2... பூஜையுடன் தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எளிய கிராமத்து மனிதர்களின் பின்னணியில் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவான படம் வெண்ணிலா கபடி குழு. 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற இந்தப் படம் தமிழ் சினிமாவின் புதிய பாணி படமாகத் திகழ்ந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து தயாராகிறது.

இந்தப் படமும் கபடியை மையமாக வைத்துதான் உருவாகிறது. படத்துக்கு வெண்ணிலா கபடி குழு-2 எனத் தலைப்பிட்டுள்ளனர்.

Vennila Kabadi Kuzhi -2 shooting launched

இப்படத்தை சுசீந்திரன் வழங்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக அர்த்தனா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் பசுபதி, கிஷோர், சூரி, ரவி மரியா, யோகி பாபு, அப்பு குட்டி, லக்ஷ்மி, பாவா லக்ஷ்மணன், திருமா, விஜய் கணேஷ், பன்னீர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் செல்வ சேகரன். இவர் பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர். படத்தின் மூலக் கதை சுசீந்திரன். இசை: வி செல்வ கணேஷ். தயாரிப்பு ஏ பூங்காவனம், என்.ஆனந்த.

இப்படத்தின் படபிடிப்பு இன்று (10.12.16) முதல் ஆரம்பமாகியது. மாம்பாக்கம் கோவளஞ்ச்சேரி முனீஸ்வரர் கோவிலில் ஆரம்பமாகி தொடர்ந்து படபிடிப்பு நடக்கிறது.

English summary
The Sequel of Suseenthiran's Vennaila Kabadi Kuzhu has been launched Today in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil