Don't Miss!
- Sports
"நீ தந்த வெளிச்சத்தில் காதல் கற்றேன்".. கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி திருமணம்.. நெகிழ்ச்சி பதிவு!
- News
அமெரிக்காவில் களைகட்டிய பொங்கல்.. பாரம்பரியத்தை இம்மியளவும் மாற்றாத தமிழர்கள்
- Finance
Ford நிறுவனத்தின் அதிரடி முடிவு.. 3200 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. எங்கு தெரியுமா?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
இந்த இளம் வயதிலேயே வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரி வைரவன் மரணம் ஏன்.. பரிதாப பின்னணி
சென்னை: வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்தது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களால் அறியப்பட்ட நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்த செய்தி கேட்டு நடிகர் விஷ்ணு விஷால் வேதனை அடைந்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கிட்னி செயலிழந்து வறுமை காரணமாக உயிருக்கு போராடி வந்த நடிகர் ஹரி வைரவன் பரிதாபமாக உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த
வாரம்
பாக்ஸ்
ஆபிஸில்
கெத்து
காட்டிய
விஷ்ணு
விஷால்…
மோசம்
போன
விஜய்
சேதுபதி!

இளம் வயதில் மரணம்
உடல்நலக்குறைவு காரணமாக விஷ்ணு விஷாலின் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் இன்று அதிகாலை 12.15 மணிக்கு காலமானார். சினிமா துறையில் ஏகப்பட்ட நடிகர்கள் இளம் வயதிலேயே மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஹரி வைரவனின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகம்
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷால் மட்டும் அறிமுகம் ஆகவில்லை. ஏகப்பட்ட புதுமுகங்கள் அறிமுகமானார்கள். அப்படி சினிமாவில் அறிமுகமானவர் தான் ஹரி வைரவன். குறைவான படங்களில் நடித்தாலும் கவனம் ஈர்த்த இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதும் கிடைக்காமல் வறுமையில் வாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

பரிதாப மரணம் ஏன்
பல ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்த நடிகர் ஹரி வைரவன் சினிமா வாய்பு இல்லாமல் வறுமையில் வாடி வந்தார். சம்பாதித்த பணமும் அவரது மருத்துவ செலவுக்கே சரியாகி விட்ட நிலையில், முறையான சிகிச்சை பெறுவதற்கு கூட அவருக்கு யாரும் உதவவில்லை. சிறுநீரகம் செயலலிழந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பேசக்கூட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். கருணை கொலை செய்து விடுங்கள் என்கிற அளவுக்கு சென்று விட்ட நிலையில், ஹரி வைரவன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதன் பின்னர், விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்டவர்கள் சிறிய உதவி செய்தனர். சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிவருவார் என எதிர்பார்த்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

விஷ்ணு விஷால் வேதனை
நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்ததை அறிந்த நடிகர் விஷ்ணு விஷால் "ஸாரி வைரவன்.. உனது ஆத்மா சாந்தியடையட்டும்.. உன்னுடன் வெண்ணிலா கபடி குழு நடித்த நாட்கள் இன்னமும் மலரும் நினைவுகளாக உள்ளது என விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.