»   »  டைவர்ஸ் கேட்கும் கிரகலட்சுமியின்முதல் கணவர்

டைவர்ஸ் கேட்கும் கிரகலட்சுமியின்முதல் கணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிகர் பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமியின் முதல் கணவரான வேணு பிரசாத் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி விட்டது. அவரது முதல் கணவர் பெயர் நாராயணன் வேணு பிரசாத். கேரளாவைச் சேர்ந்த அவருடன் சேர்ந்து வாழாமல் பிரிந்து விட்ட கிரகலட்சுமி பின்னர் பிரஷாந்த்தைக் கல்யாணம் செய்து கொண்டார்.

ஆனால் தனது முதல் கல்யாணம் குறித்து பிரஷாந்த்திடம் கிரகலட்சுமியும், அவரது குடும்பத்தினரும் தெரிவிக்காமல் மறைத்து விட்டனர்.

தற்போது கிரகலட்சுமியும், பிரஷாந்த்தும் தனியாக வசித்து வருகின்றனர். வேணு பிரசாத் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு வாழ்கிறார்.

தனது மனைவிக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்ட செய்தியை அறிந்த பிரஷாந்த், குடும்ப நல நீதிமன்றத்தில் தனது மனைவியை சேர்த்து வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், கிரகலட்சுமியின் முதல் கணவர் பிரசாத், கிரகலட்சுமியிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 1998ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. கணவன், மனைவியாக வாழவில்லை.

9 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கிறோம். எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார் பிரசாத்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil