அடுத்தடுத்து தனது வேலைகளை செய்து அசத்தி வரும் மிஸ்டர் எக்ஸ்

சென்னை: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது என்னை நோக்கி பாயும் தோட்டா பட புரோமஷனுக்காக இசையமைப்பாளர் தர்புகா சிவாவை பல நாட்களாக மறைத்து படத்தின் பாடல் வெளியீட்டின் போது இந்த பாடலை இசையமைத்தவர் மிஸ்டர் எக்ஸ் என்றே கூறிவந்தார்.

அதற்கு பிறகு பல நாட்கள் கழித்து தர்புகா சிவாதான் படத்தின் இசையமைப்பாளர் என்று அதிகாரபூர்வமாய் அறிவித்தார் . ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக என்னை நோக்கி பாயும் தோட்டா படம் இன்றளவும் ரிலீஸாகவில்லை .அதற்கு முன் தர்புகா சிவா சசிகுமாரின் கிடாரி படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

versatile musician darbuka shiva joining hands with goutham vasudev menon

என்னை நோக்கி பாயும் தோட்டா படம் தற்போது ரிலீஸாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷன் படத்தை வாங்கி வெளியிட இருக்கிறார் இதற்கான அதிகாரபூர்வ போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் டிரென்டாகி வருகிறது ,ஐசரி கணேஷனின் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தகவல்கள் தெரிவிக்கபட்டன, மேலும் படம் நவம்பர் 29 ரிலீஸாக போவதாக அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தாலும் ,படம் வெளிவந்தால் மட்டுமே நாம் அதை உறுதி செய்ய முடியும் ஏனெனில் படம் இதற்கு முன்பே பத்திற்கும் மேற்பட்ட தடவை தள்ளி போய்விட்டது, இந்த விசயம் படத்தின் ஓபனிங்கை கட்டாயமாக பாதிக்கும் .

இந்த படம் இவ்வளவு முறை தள்ளி போயும் படத்தின் மீது எதிர்பார்ப்பு குறையாமல் இருப்பதற்கு காரணம் படத்தின் சிறந்த பாடல்கள், அதற்கு காரணம் தர்புகா சிவா.

சில படங்களில் நடித்தும் இருக்கும் இசையமைப்பாளர் தர்புகா சிவா தற்போது படம் இயக்க உள்ளார் . இந்த படத்தை சூப்பர் டாக்கீஸின் சமீர் பாரத் ராமுடன் தீபா ஜயரும் இணைந்து தயாரிக்க உள்ளனர் .தர்புகா சிவா படத்தின் தகவல்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் .

படத்தின் ஒளிப்பதிவை சுஜித் சாரங் செய்கிறார் ,இவர் துருவங்கள் பதினாறு ,நரகாசுரன், டேக்ஸிவாலா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் .

மேலும் படத்தின் படத்தொகுப்பை ஶ்ரீஜித்சாரங் செய்ய உள்ளார் . மேலும் படத்தை பற்றி தகவல்களை டிவிட்டரில் தர்புகா சிவா பதிவிடுவார் என்று தெரிகிறது.

சிவா மனசுல சக்தியா இருக்கிறது தன்னோட இசை மட்டுமே , பல கனவுகளுடன் பயணம் செய்யும் டர்புகா சிவா கௌதம் மேனனுடன் மிக பெரிய வெற்றியை கொடுக்க வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X