அடக்கடவுளே..பழம்பெரும் நடிகர் மரணம்..அதிர்ச்சியில் திரைத்துறை!

சென்னை : பழம்பெரும் இந்தி நடிகர் அருண்பாலி திடீரென காலமானார்.

இவர் பாலிவுட் நடிகராக இருந்தாலும்,ஜென்டில்மேன், சத்யா, 3இடியட்ஸ், ரெடி, பர்ஃபி, கேதர்நாத், சாம்ராட் பிருத்விராஜ் என ஏராளமான படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான அருண் பாலியின் மரணம் அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் அருண்பாலி

நடிகர் அருண்பாலி

பழம் பெரும் நடிகரான அருண்பாலி, 1991ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாணக்யாவில் கிங் போரசாகவும், ஸ்வாபிமானில் குன்வர் சிங் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து, கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான படத்தில் பிரிக்கப்படாத வங்காளத்தின் முதலமைச்சர் ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தியாகவும் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

தாத்தாவாக நடித்திருந்தார்

தாத்தாவாக நடித்திருந்தார்

இவர் சமீபத்தில், அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா, சுனில் குரோவர், பவைல் குலாட்டி, ஆஷிஷ் வித்யார்த்தி, எல்லி அவர்ராம், சாஹில் மேத்தா, ஷிவின் நரங் மற்றும் அபிஷேக் கான் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தாத்தாவாக நடித்திருந்தார் அருண்பாலி.

அதிகாலை 4.30க்கு உயிரிழந்தார்

அதிகாலை 4.30க்கு உயிரிழந்தார்

79 வயதான அருண் பாலி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மயஸ்தீனியா கிராவிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண்பாலி இன்று காலை 4.30க்கு உயிரிழந்ததாக அருண் பாலியின் மகன் அங்குஷ் தெரிவித்துள்ளார். தந்தை தன் 79 வயதில் இன்று அதிகாலை உயிரிழந்ததாக தெரிவித்தார்.

இன்று மாலை இறுதிச்சடங்கு

இன்று மாலை இறுதிச்சடங்கு

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான அருண் பாலியின் மரணம் அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் தேசிய விருது பெற்ற ஒரு படத்தையும் தயாரித்திருந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர் நடிகைகள் பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் இறுதிச்சடங்கு அவரது இல்லத்தில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X