twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர் மதுவின் 80வது பிறந்த நாள் கொண்டாட்டம் - கமல், மம்முட்டி வாழ்த்து

    By Shankar
    |

    சென்னை: சென்னையில் நேற்று நடந்த மலையாளத் திரைப்பட விழாவில் மூத்த நடிகரும் இயக்குநருமான மதுவுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு நடிகர்கள் கமல், மம்முட்டி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    சினிமா நூற்றாண்டு 3 - வது நாள் விழாவை மலையாள பட உலகம் கொண்டாடியது. அதில், கேரள பாரம்பரிய நடனங்களுடன், மலையாள பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 21-ந் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.

    22-ம் தேதி கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    மலையாளப் பட விழா

    மலையாளப் பட விழா

    3-வது நாள் நிகழ்ச்சியாக மலையாள திரையுலகினரின் விழா நடந்தது. இந்த விழாவை மத்திய அமைச்சர் வயலார் ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கேரள மந்திரி கே.சி.ஜோசப் முன்னிலை வகித்தார். விழாவில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    வயலார் ரவி

    வயலார் ரவி

    மத்திய அமைச்சர் வயலார் ரவி பேசும்போது, ‘‘நான் சிறுவனாக இருந்தபோது டூரிங் தியேட்டரில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். போல் மலையாள சினிமாவில் பிரேம் நசீர், சத்யன், மது ஆகியோர் இருந்தார்கள். மலையாள பட உலகில் வர்த்தக படங்கள் வெற்றி பெற்றது போல், சோகமான கதையம்சம் கொண்ட படங்களும் வெற்றி பெற்றுள்ளன'' என்றார்.

    கமல்ஹாஸன்

    கமல்ஹாஸன்

    கமல்ஹாசன் பேசும்போது, ‘‘மது சேட்டன் படத்தில் நான் டெக்னீசியனாக வேலை செய்து இருக்கிறேன். என் திரையுலக வளர்ச்சிக்கு மலையாள சினிமா கலைஞர்களும் உதவியிருக்கிறார்கள். இந்த இடத்தில் நான் நிற்பதற்கு அவர்களும் ஒரு காரணம்'' என்றார்.

    மம்முட்டி–மோகன்லால்

    மம்முட்டி–மோகன்லால்

    மலையாள நடிகர்கள் மது, மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், மனோஜ் கே.ஜெயன், நடிகைகள் ஷீலா, சாரதா, லிசி பிரியதர்ஷன், சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், அம்பிகா, ஊர்வசி, ரேகா, ரோகிணி, கார்த்திகா, அபிராமி, லட்சுமி ராமகிருஷ்ணா, பின்னணி பாடகி சித்ரா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டார்கள்.

    டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி' செயலாளர் ஜி.சிவா, டைரக்டர்கள் பி.வாசு, ஆர்.வி.உதயகுமார் ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தார்கள்.

    கலைநிகழ்ச்சிகள்

    கலைநிகழ்ச்சிகள்

    கேரள பாரம்பரிய நடனங்களுடன் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பழைய மலையாள சினிமா பாடல்களுக்கு நடிகைகள் நஸ்ரியா, ரம்யா நம்பீசன், மீராநந்தன், ஸ்வேதா மேனன் ஆகியோர் நடனம் ஆடினார்கள்.

    மதுவின் 80 வது பிறந்த நாள்

    மதுவின் 80 வது பிறந்த நாள்

    விழா மேடையில், நடிகர் - இயக்குநர் மதுவின் 80-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மாலை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.

    தமிழில் தர்மதுரை படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்தவர் மது என்பது நினைவிருக்கலாம்.

    English summary
    Veteran Malayalam actor / director Madhu's 80th birthday was celebrated on the stage of Indian Cinema centenary event.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X