»   »  பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்... 1000 படங்களுக்கும் மேல் நடித்தவர்!

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்... 1000 படங்களுக்கும் மேல் நடித்தவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அன்னாருக்கு வயது 90.

காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வி.எஸ் ராகவன் 1925-ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே நாடகங்கள் மீது ஈர்ப்பு கொண்ட வி.எஸ்.ராகவன், காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நாடகக் குழுக்களில் இணைந்து நடித்து வந்தார்.

பின்னர், சென்னை வந்த வி.எஸ்.ராகவன் இயக்குநர் பாலசந்தர் எழுதிய பல நாடகங்களில் நடித்துள்ளார். "நகையே உனக்கு நமஸ்காரம்' என்ற பெயரில் இவர் நடித்த நாடகம் அந்த நாள்களில் பிரபலமானது.

வைரமாலை...

வைரமாலை...

பின்னர், 1954-ஆம் ஆண்டு வெளிவந்த வைரமாலை என்ற தமிழ்ப்படத்தின் மூலம் சினிமாவில் அவர் அறிமுகம் ஆனார். ஆரம்ப காலத்தில் சிறு வேடங்களில் நடித்து வந்த அவர் பின்னாளில் சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கினார்.

தலைமுறை கடந்த நடிப்பு...

தலைமுறை கடந்த நடிப்பு...

"சங்கே முழங்கு', "உரிமைக்குரல்', "சவாலே சமாளி', "வசந்த மாளிகை' என பல படங்களில் நடித்துள்ள வி.எஸ்.ராகவன், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

1000 படங்களுக்கும் மேல்...

1000 படங்களுக்கும் மேல்...

1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வி.எஸ்.ராகவன், சமீபத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். நாடகம், சினிமா மட்டுமின்றி, சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்

காத்தாடி...

காத்தாடி...

சாகும் வரையிலும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. இவர் கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.

காலமானார்...

காலமானார்...

சமீபகாலமாக கணையப் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த வி.எஸ்.ராகவன், சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை அவர் காலமானார்.

குடும்பம்...

குடும்பம்...

மறைந்த வி.எஸ். ராகவனுக்கு கே.ஆர்.சீனிவாசன், கே.ஆர்.கிருஷ்ணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மனைவி தங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இறுதிச்சடங்கு...

இறுதிச்சடங்கு...

அன்னாரது உடல், மந்தைவெளி ராமகிருஷ்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் அன்னாரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

English summary
Veteran film and theatre actor, V.S. Raghavan, 90, died on Saturday after battling pancreatic cancer. He is survived by two sons.
Please Wait while comments are loading...