»   »  மூத்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்கே விஸ்வநாதன் மரணம்!

மூத்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்கே விஸ்வநாதன் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான என் கே விஸ்வநாதன் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.

1970-களில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான என்.கே.விஸ்வநாதன், கமல் நடித்த சட்டம் என் கையில், கடல் மீன்கள், கல்யாணராமன், மீண்டும் கோகிலா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

Veteran cinematographer, Director NK Viswanathan passes away

மறைந்த இயக்குநர் இராம நாராயணனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தார் என்கே விஸ்வநாதன்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த என்கே விஸ்வநாதன், 1990ல் இயக்குநராக அவதாரமெடுத்தார்.

பாண்டி நாட்டுத் தங்கம், எங்க ஊரு காவக்காரன், இணைந்த கைகள், நாடோடி பாட்டுக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய மருது, புதுப்பட்டி பொன்னுத்தாயி, ஜெகன் மோகினி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

நேற்று மாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் என்.கே.விஸ்வநாதன் மாரடைப்பால் காலமானார்.

அவரது மனைவி ஜெயந்தி ஏற்கெனவே காலமாகிவிட்டார். அவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருக்கிறார்.

மறைந்த என்கேவிக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Read more about: nk viswanathan, death, மரணம்
English summary
Veteran Cinematographer, director NK Viswanathan was died in Chennai. He was 75.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil