twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்தமில்லாமல் கல்வி சேவை...நடிகர் தாமுவிற்கு விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசு

    |

    சென்னை : மிமிக்ரி கலைஞரான தாமு, 1992 ம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'வானமே எல்லை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து, புகழ்பெற்ற காமெடி நடிகராக இருந்து வருகிறார். விஜய்யின் 'கில்லி' உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    கையில் நாய்க்குட்டியுடன் குலுங்கி குலுங்கி ஓடி வரும் இலக்கியா.. திக்குமுக்காடும் இன்ஸ்டா! கையில் நாய்க்குட்டியுடன் குலுங்கி குலுங்கி ஓடி வரும் இலக்கியா.. திக்குமுக்காடும் இன்ஸ்டா!

    விக்ரம், அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார் தாமு. இவர் நடித்த ஜெமினி, அமர்க்களம், காதலுக்கு மரியாதை, கில்லி உள்ளிட்ட படங்கள் மெகாஹிட் படங்களாக இருந்துள்ளன.

    10 ஆண்டு கால சமூக சேவை

    10 ஆண்டு கால சமூக சேவை

    கடந்த சில ஆண்டுகளாக படங்கள் எதிலும் நடிக்காத தாமு, பல சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கல்வித் துறையில் இவர் பல சேவைகளை செய்து வருகிறார். தாமுவின் இந்த சேவையை பாராட்டி மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    மத்திய அரசு கெளரவம்

    மத்திய அரசு கெளரவம்

    கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் தாமு ஆற்றிய சேவைக்கு பாராட்டு தெரிவித்து தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தேசிய கல்வியாளருக்கான கெளரவ விருதான 'ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021' என்ற விருதை அளித்துள்ளது.

    கலாமால் நியமிக்கப்பட்ட தாமு

    கலாமால் நியமிக்கப்பட்ட தாமு

    கல்வித் துறையில் சேவை செய்து வரும் தாமு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமால் கல்வித்துறைக்கு மாணவர்களின் வளர்ச்சிக்கு பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனக்கு கிடைத்த இந்த கௌரவ விருது குறித்து நடிகர் தாமு கூறுகையில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், நடிகர் விவேக்கை எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்த நியமனம் செய்தாரோ, அதே போல் என்னை மாணவர்களின் வளர்ச்சிக்கு பயிற்சி அளிக்க நியமித்தார்.

     பயனில்லாத ஆன்லைன் வகுப்புக்கள்

    பயனில்லாத ஆன்லைன் வகுப்புக்கள்

    இந்தியா வளர்ச்சி அடைவதற்கு கலாம் பல்வேறு நபர்களை நியமித்து பொறுப்புகளை ஒப்படைத்து உள்ளார். தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் கல்வியால் மாணவர்களின் வளர்ச்சிக்கு பயனில்லை. இந்த கல்வி முறை 25 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே பயன் அளிக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வேறு வழியின்றி ஆன்லைன் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது என்றார்.

    20 லட்சம் மாணவர்களுக்கு உதவி

    20 லட்சம் மாணவர்களுக்கு உதவி

    தாமு, கடந்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களின் கல்விக்காக உதவி உள்ளார். மத்திய அரசின் கெளரவ விருது பெற்ற நடிகர் தாமுவுக்கு திரையுலகினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் நடந்த விழாவில் இந்த விருது தாமுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

    English summary
    Dhamu has received the National Education Pride Award for his continuous efforts in the past decade in Education and Development.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X