»   »  ஷூட்டிங்கில் மயங்கி விழுந்து பிரபல சீனியர் நடிகை மரணம்

ஷூட்டிங்கில் மயங்கி விழுந்து பிரபல சீனியர் நடிகை மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் டிவி தொடர் ஷூட்டிங்கில் இருந்த கன்னட நடிகை பத்ம குமுதா மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

பிரபல கன்னட நடிகை பத்ம குமுதா(58). சோமன துதி கன்னட படத்திற்காக தேசிய விருது பெற்றவர் குமுதா. பல படங்களில் நடித்த அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Veteran Kannada actress Padma Kumuta passed away

அண்மை காலமாக அவர் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த திங்கட்கிழமை அவர் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் திடீர் என மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது. குமதாவுக்கு கணவர், மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

திறமையான நடிகையான குமுதாவின் மறைவுக்கு கன்னட திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Read more about: sandalwood, dead, மரணம்
English summary
Veteran Kannada actress Padma Kumuta collpased during a TV serial shoot and died of cardiac arrest in Bengaluru on monday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil