»   »  தர்மயுத்தம், சிறை, கூட்டுப் புழுக்கள் ஆர் சி சக்தியின் தனித்துவமிக்க படைப்புகள்

தர்மயுத்தம், சிறை, கூட்டுப் புழுக்கள் ஆர் சி சக்தியின் தனித்துவமிக்க படைப்புகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆர் சி சக்தி... தனித்துவம் மிக்க தலைப்புகள், கருத்துகள் கொண்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர்.

நாடகம், வில்லுப்பாட்டு என்று இருந்த ஆர்சி சக்தி, மிகுந்த போராட்டத்துக்குப் பிறகுதான் பொற்சிலை என்ற படத்துக்கு உதவி இயக்குநர் ஆனார்.

உணர்ச்சிகள்

உணர்ச்சிகள்

பின்னர் அவர் அன்னை வேளாங்கன்னி படத்துக்கு திரைக்கதை எழுதினார். அடுத்த இரு ஆண்டுகளில் அவர் தனியாகப் படம் இயக்க ஆரம்பித்தார். அவர் இயக்கிய முதல் படம் உணர்ச்சிகள். கமல்ஹாஸன் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான். இந்தப் படத்திலேயே அவர் பாலியல் ரீதியான சிக்கல்கள், பால்வினை நோய் தாக்குதல் என பிரச்சினைக்குரிய கதையைக் கையாண்டார். ஸ்ரீவித்யா நடித்திருந்தார்.

இந்தப் படம் மலையாளத்தில் ராசலீலா என்ற பெயரில் கமல் - ஜெயசுதா நடித்து வெளியாகி பெரும் வெற்றி வெற்றது.

மனிதரில் இத்தனை நிறங்களா

மனிதரில் இத்தனை நிறங்களா

இந்தப் படத்தின் தலைப்பே பலரையும் கவனிக்க வைத்தது. இது எழுத்தாளர் ஜெயகாந்தன் நாவல் ஒன்றின் தலைப்பும் கூட.

படத்தில் கமல், ஸ்ரீதேவி, சத்யப்ரியா நடித்திருந்தனர். ஆனால் கமலுக்கு ஸ்ரீதேவி ஜோடியில்லை. தவறான பின்னணி கொண்ட, ஆனால் அப்பழுக்கற்ற ஒரு திருமணமாகாத பெண் எதிர்நோக்கும் சவால்களை மிக இயல்பாகச் சொல்லியிருந்தார் ஆர் சி சக்தி. ஷ்யாமின் இசை இந்தப் படத்துக்கு பெரும் சிறப்பு சேர்த்தது. மழை தருமோ... பாடல் இப்போது கேட்டாலும் பசுமையாய் இருக்கும்.

தர்மயுத்தம்

தர்மயுத்தம்

ரஜினி - ஸ்ரீதேவியை வைத்து ஆர்சி சக்தி இயக்கிய பெரும் வெற்றிப் படம் தர்மயுத்தம். ரஜினி அப்போது மிக மிக பிஸியாக இருந்த நேரம். 1978-ல் இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். அந்த ஆண்டு மட்டும் ரஜினி 20 படங்களில் நடித்திருந்தார். பெரும்பாலும் ஹீரோ வேடம்தான். அடுத்தடுத்த ஹிட் கொடுத்த அவர், கமல் சொன்னதால் ஆர் சி சக்தியின் கதையைக் கேட்டு ஓகே சொன்னாராம்.

இந்தப் படம் ரஜினிக்கு இன்னும் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இளையராஜா இசையில் அத்தனைப் பாடல்களும் பெரும் பிரபலமடைந்தன. குறிப்பாக ஆகாய கங்கை மற்றும் ஒரு தங்க ரதத்தில்...

சிறை

சிறை

அனுராதா ரமணன் எழுதிய சிறுகதையான சிறையை, அதே பெயரில் படமாக்கினார் ஆர்சி சக்தி. அன்றைக்கு வெளியான படங்களில் மிகவும் புரட்சிக் கருத்து கொண்ட படமாக விமர்சிக்கப்பட்டது இந்தப் படம்.

லட்சுமி, ராஜேஷ் இருவரும் உயர் தரமான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்கள். எம்எஸ்வியின் இசை, ஆர்சி சக்தியின் இயக்கம் போன்றவை இந்தப் படத்துக்கு ஒரு க்ளாஸிக் அந்தஸ்தைக் கொடுத்தன.

கூட்டுப் புழுக்கள்

கூட்டுப் புழுக்கள்

ரகுவரன், அமலா, சந்திரசேகரன், இளவரசி நடிப்பில் 1987-ல் வெளியான படம் கூட்டுப் புழுக்கள். ஆர் சி சக்தி இயக்க, எம்எஸ்வி இசையமைத்திருந்தார்.

பெயரே கதையின் தன்மையைச் சொல்லிவிடும். நடுத்தர வர்க்கத்து கதை மாந்தர்கள், ஒரு நேர்மையான இளைஞனுக்கும் அழகான பெண்ணுக்குமிடையிலான காதலை மிகுந்த கண்ணியமாக சொன்ன படம் இது. 'இன்னிக்கு நடந்த நினைப்பிலே...' என்ற பாடல் மிக இனிமையாக இருக்கும்.

இவை தவிர சந்தோஷக் கனவுகள், மனக் கணக்கு, தாலி தானம், நாம், தவம், வரம் உள்பட 28 படங்களை இயக்கியுள்ளார் ஆர் சி சக்தி.

ரோஜாக்கள் ஐந்து..

ரோஜாக்கள் ஐந்து..

கமலின் மருத நாயகம் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்கவிருந்தார் ஆர் சி சக்தி. 2013ம் ஆண்டு ரோஜாக்கள் ஐந்து என்ற தலைப்பில் ஒரு குறும் படத்தை இயக்க ஆரம்பித்தார் ஆர்சி சக்தி. இந்தப் படத்துக்காக கமல் ஹாஸன் ஒரு பாடலை இயற்றிப் பாடிக் கொடுத்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை.

English summary
Late veteran director RC Sakthi's creations Dharmayudham, Chirai, Thavam, Kootu Puzhukkal are very interesting and classic tales.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil