twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காற்றில் கரைந்த கான குயில்...பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

    |

    மும்பை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா மற்றும் நிமோனியா உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜனவரி 8ம் தேதி மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பல நாட்களாக ஐசியு.,வில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் உள்ளிட்டவைகள் நீக்கப்பட்டன.

    பரம்பரை வீட்டை விற்ற அமிதாப்பச்சன்… திடீரென வீட்டை விற்க என்ன காரணம் ?பரம்பரை வீட்டை விற்ற அமிதாப்பச்சன்… திடீரென வீட்டை விற்க என்ன காரணம் ?

    லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்

    லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்

    படிப்படியாக தேறி வந்த நிலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. இதன் காரணமாக மீண்டும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவரை கண்காணித்து வந்தனர். 92 வயதாகும் லதா மங்கேஷ்கர் லேசான கொரோனா அறிகுறிகளுடனேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் பிரதித் சம்தானி தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சை அளித்து வந்தது.

    காலமானார் கான குயில்

    காலமானார் கான குயில்

    லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தேறி விட்டதாகவும், வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் இரண்டு நாட்களுக்கு முன் டாக்டர்கள் கூறி இருந்தனர். ஆக்சிஜன் மட்டும் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைப்பு தருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்த நிலையில் நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது

    தலைசிறந்த பாடகி

    தலைசிறந்த பாடகி

    இந்திய சினிமாவின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவராக திகழும் லதா மங்கேஷ்கர், 1942 ம் ஆண்டு தனது 13வது வயதில் இசை பயணத்தை துவங்கினார். இந்திய மொழிகள் பலவற்றில் கிட்டதட்ட 30,000 க்கும் அதிகமான பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடி உள்ளார். பல விருதுகள், பல கெளரவங்களை பெற்ற லதா மங்கேஷ்கர், இந்தியாவின் நைட்டிங்கேல் என போற்றப்படுபவர்.

    Recommended Video

    சுய இன்ப சீனுக்கு லதா மங்கேஷ்கர் குரலா?- வீடியோ
    பல விருது, கெளரவத்திற்கு சொந்தக்காரர்

    பல விருது, கெளரவத்திற்கு சொந்தக்காரர்

    விருதுகள் இந்தியாவின் நைட்டிங் கேள் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகிப் பால்கே, ஏராளமான தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினையும் இவர் பெற்றுள்ளார். அவர் விரைவில் குணமடைய திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Popular singer Lata Mangeshkar, who was suffering from corona and was treated at a hospital for a month, passed away this morning. Fans and celebrities are in mourning for her passing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X