பாடகி லதா மங்கேஸ்கர் கவலைக்கிடம்...மீண்டும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

மும்பை : பிரபல பாடகி லதா மங்கேஸ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா மற்றும் நிமோனியா உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜனவரி 8ம் தேதி மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பல நாட்களாக ஐசியு.,வில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் உள்ளிட்டவைகள் நீக்கப்பட்டன.

 வதந்தி பரப்ப வேண்டாம்

வதந்தி பரப்ப வேண்டாம்

இந்நிலையில் லதா மங்கேஸ்கர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக மீடியாக்களில் தகவல் பரவியது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த லதா மங்கேஷ்கரின் பிஆர்ஓ, அவர் நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வதந்தி பரப்புவதற்கு பதில், லதா மங்கேஷ்கர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.

லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்

லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்

படிப்படியாக தேறி வந்த நிலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை இன்று மீண்டும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர். 92 வயதாகும் லதா மங்கேஷ்கர் லேசான கொரோனா அறிகுறிகளுடனேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் பிரதித் சம்தானி தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சை அளித்து வந்தது.

உடல்நிலை தேறி வந்த லதா மங்கேஷ்கர்

உடல்நிலை தேறி வந்த லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தேறி விட்டதாகவும், வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் இரண்டு நாட்களுக்கு முன் டாக்டர்கள் கூறி இருந்தனர். ஆக்சிஜன் மட்டுள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைப்பு தருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்த நிலையில் இன்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.

தலைசிறந்த பாடகி

தலைசிறந்த பாடகி

இந்திய சினிமாவின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவராக திகழும் லதா மங்கேஷ்கர், 1942 ஆம் ஆண்டு தனது 13வது வயதில் இசை பயணத்தை துவங்கினார். இந்திய மொழிகள் பலவற்றில் கிட்டதட்ட 30,000 க்கும் அதிகமான பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடி உள்ளார். பல விருதுகள், பல கெளரவங்களை பெற்ற லதா மங்கேஷ்கர், இந்தியாவின் நைட்டிங்கேள் என போற்றப்படுபவர்.

பல விருது, கெளரவத்திற்கு சொந்தக்காரர்

பல விருது, கெளரவத்திற்கு சொந்தக்காரர்

பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகிப் பால்கே, ஏராளமான தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினையும் இவர் பெற்றுள்ளார். அவர் விரைவில் குணமடைய திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X