twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசை நிகழ்ச்சியில் இருந்து வீட்டிற்கு சென்ற வழியில் பிரபல பாடகர் மாரடைப்பால் மரணம்

    By Siva
    |

    மும்பை: பிரபல பாடகர் முகமது அஜீஸ் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் முகமது அஜீஸ்(64). பெங்காளி, இந்தி, ஒடியா படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் அஜீஸ் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நேற்று மதியம் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு வந்தார்.

    மரணம்

    மரணம்

    மாலை 4.30 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து கேப் மூலம் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். வழியில் தனக்கு ஒரு மாதிரியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நானாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரங்கல்

    அஜீஸின் திடீர் மரணம் குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

    ஆல் இந்தியா ரேடியோ

    பாடகர் அஜீஸ் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64. அவரை என்றுமே மிஸ் பண்ணுவோம் என்று ஆல் இந்தியா ரேடியோ தர்பங்கா ட்வீட்டியுள்ளது.

    துக்க தினம்

    இன்று இசைத்துறைக்கு துக்க தினம்.

    English summary
    Legendary Bollywood singer Mohammed Aziz died of cardiac arrest while he was on his way back home from Mumbai airport.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X