»   »  ரஜினி, கமல் படங்களின் புகைப்படக் கலைஞர் நேஷனல் செல்லையா மறைவு!

ரஜினி, கமல் படங்களின் புகைப்படக் கலைஞர் நேஷனல் செல்லையா மறைவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல சினிமா போட்டோகிராபர் கலைமாமணி நேஷனல் செல்லையா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.

எம் ஜி ஆர், சிவாஜி ஜெமினி, ஜெய்சங்கர், ரஜினி, கமல் முதல் இளைய தலைமுறை நடிகர்கள் வரை இவர் கேமராவில் சிக்காதவர்களே இல்லை.

Veteran still photographer National Chellaiya passes away

சுமார் 1200 திரைப்படங்களில் பணியாற்றிய இவர் கடைசியாக பணியாற்றிய படம் 'பாட்ஷா'. அந்தப் படத்தில் ஒரு காட்சியிலும் (நீ நடந்தால் நடையழகு பாடலில், கான்ஸ்டபிள் வேடம்) நடிக்க வைத்திருந்தார் ரஜினி.

நேஷனல் செல்லையா காரைக்குடியைச் சேர்ந்தவர். 1950-ல் ஏவிஎம்மில் உதவி புகைப்படக் கலைஞராக பணியைத் தொடங்கினார். இவர் முதல் முறையாக நிழற்படக் கலைஞராகப் பணியாற்றிய படம் மிஸ்ஸியம்மா. தொடர்ந்து ஏவிஎம் படங்கள், எஸ் பி முத்துராமன், கே பாலச்சந்தர், ராம நாராயணன், விசு, துரை போன்றவர்களின் படங்களில் ஆஸ்தான ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றினார்.

குறிப்பாக பாட்ஷா வரை ரஜினியின் பல படங்களுக்கு இவர்தான் புகைப்படக் கலைஞர்.

உடல் நலக்குறைவால் நேற்று இரவு மரணமடந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடக்கிறது.

Read more about: photographer, death, மரணம்
English summary
Veteran still photographer National Chellaiya has been passed away on yesterday night in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil