»   »  ‘அம்மா காமாட்சி, வந்துருக்குற புள்ளைகளுக்கு காப்பித் தண்ணி குடுமா…’-காலத்தால் மறையாத சண்முகசுந்தரம்

‘அம்மா காமாட்சி, வந்துருக்குற புள்ளைகளுக்கு காப்பித் தண்ணி குடுமா…’-காலத்தால் மறையாத சண்முகசுந்தரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பழம்பெரும் நடிகர் சண்முக சுந்தரம் இன்று சென்னையில் காலமானார்.
கங்கை அமரன் இயக்கிய 'கரகாட்டக்காரன்' படத்தில் நாயகி கனகாவின் அப்பாவாக நடித்தவர் நடிகர் சண்முகசுந்தரம். 79 வயதான இவர் சிவாஜி கணேசன் முதல் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் வரை பலருடனும் நடித்திருக்கிறார்.

மயிலாப்பூரில் தனது வீட்டில் சில நாட்களாகவே சண்முகசுந்தரத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இன்று சண்முக சுந்தரம் காலமானார். அவரது இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும்.

சிவாஜியால் அறிமுகம் :

சிவாஜியால் அறிமுகம் :

ஆரம்பகாலத்தில் நாடகங்களில் நடித்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூலம் ‘ரத்தத் திலகம்' படத்தில் அறிமுகமானார். பிறகு, ‘கர்ணன்', ‘இதயக்கனி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
ஷங்கர் இயக்கிய ‘நண்பன்', வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை-600028' மற்றும் சில படங்களில் குணச்சித்திர, காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் வெளியான ‘அன்பானவன் அசராதவன், அடங்காதவன்' படத்திலும் நடித்திருந்தார்.

வசனங்கள் வெகு பிரபலம் :

வசனங்கள் வெகு பிரபலம் :

‘கரகாட்டக்காரன் படத்தில் காந்திமதியின் தம்பியாக நடித்த இவர் பேசும் வசனம் வெகு பிரபலமானது. அவர் பேச்சு நடை சற்று வித்தியாசமானது என்பதற்காகவே வெகுவாக ரசிக்கப்பட்டார். ‘சென்னை-600028' பட்த்தில் கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் போடும் அவர் அணி கேப்டனைப் பார்த்து ‘பௌலிங்கா... ஃபீல்டிங்கா...?' எனக் கேட்பார். அந்தக் காமெடி வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.

சண்முகசுந்தரம் குரல் :

சண்முகசுந்தரம் குரல் :

‘அம்மா காமாட்சி, வந்துருக்குற புள்ளைக்களுக்கு காப்பித்தண்ணி குடுமா...' என தோளில் போட்டிருக்கும் துண்டை நெஞ்சில் பிடித்துக்கொண்டே பேசும் சண்முக சுந்தரம் தமிழ் சினிமாவில் தேர்ந்த குணச்சித்திர நடிகர். சண்முக சுந்தரம் உங்களுக்கு அறிமுகமாகியிருந்தால், இந்த வசனம் உங்களுக்கு அவரது குரலிலேயே கேட்கும்.

தொலைக்காட்சி சீரியல்கள் :

தொலைக்காட்சி சீரியல்கள் :

ராதிகா லீட் ரோலில் நடித்த ‘அண்ணாமலை', ‘செல்வி', ‘அரசி' மற்றும் ‘வம்சம்' உள்ளிட்ட சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இரங்கல்

இரங்கல்

பழம்பெரும் நடிகர் சண்முகசுந்தரத்தின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Read more about: karakattakaran, chennai 28
English summary
Veteran Tamil actor Shanmugasundaram passed away

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil