twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல மலையாள நடிகை லலிதா காலமானார்... திரை பிரபலங்கள் இரங்கல்

    |

    சென்னை : பழம்பெரும் மலையாள நடிகை KPAC லலிதா காலமானார். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினிக்கு அம்மாவாகவும், அலைபாயுதே படத்தில் மாதவனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார் லலிதா. 74 வயதாகும் லலிதா, உடல்நலக் குறைவால் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானாா். இவர் இதுவரை 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    மகேஷ்வரி அம்மா என்ற பெயர் கொண்ட இவர், சினிமாவிற்காக தனது பெயரை லலிதா என மாற்றிக் கொண்டார். இடதுசாரிகளின் கேரளா மக்கள் கலை கழகம் (Kerala People's Arts Club) உறுப்பினராக சேர்ந்து தியேட்டர் ஆர்டிஸ்டாக தனது வாழ்க்கையை துவங்கிய லலிதா, 1969 ல் கே.எஸ்.சேது மாதவன் இயக்கிய கூட்டு குடும்பம் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.

    Veterian malayalam actress KPAC Lalitha passes away

    தனது நடிப்பு திறமையால் தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 80 கள் துவங்கி 2010 வரை பல ரோல்களில் நடித்து திரையுலகில் பிரபலமான நடிகையாக வளர்ந்தார் லலிதா. பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. பெரும்பாலும் குடும்ப படங்களில் அம்மா, சகோதரி, மகள், நாத்தனார் போன்ற ரோல்களிலேயே நடித்துள்ளார்.

    மலையாளத்தில் கொடியேற்றம், சத்தம்பிகல்யாணி, ராஜஹம்சம், வியட்நாம் காலனி, மணிசித்திரதுழா உள்ளிட்ட பல படங்கள் லலிதா நடித்த படங்களில் மிகவும் குறிப்பிட தகுந்தவை. அமரம், சாந்தம் போன்ற படங்களுக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினையும் லலிதா பெற்றுள்ளார். கேரள சங்கீத நாட்டிய அகாடமியின் தலைவராக இவர் இருந்துள்ளார்.

    லதா மங்கேஷ்கர் “இசையால் என்றென்றும் வாழ்வார்“… பிரபலங்கள் இரங்கல் !லதா மங்கேஷ்கர் “இசையால் என்றென்றும் வாழ்வார்“… பிரபலங்கள் இரங்கல் !

    பரதன் என்ற சினிமா டைரக்டரை லலிதா திருமணம் செய்து கொண்டார். அவர் 1998 ம் ஆண்டே காலமானார். லலிதாவின் மகன் சித்தார்த்தும் ஒரு நடிகர். இவர் டைரக்டரும் கூட. லலிதா தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    பல காலமாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த லலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கொச்சியில் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மஞ்சு வாரியர், ப்ருத்விராஜ் சுகுமாறன் உள்ளிட்ட மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Veterian malayalam actress KPAC lalitha passes away. She was admitted in hospital from december last year. Not only malayalam movies, she also acted in few tamils like kadhaluku mariyadhai, alaipayuthae, paramasivan, maamanidhan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X